இன்னைக்கு டீக்கடைக்கு போனப்ப, ’கும்பமேளாவுள சாமியாரா மாறுன அந்த நடிகை குல்கர்னிய பாத்து, ’உலக இன்பங்களை எல்லாம் அனுபவிச்சிட்டு திடீர்னு ஒரே நாளில் துறவிகளாக மாறிடுறாங்க’னு ஒரு பிசினஸ் சாமியாரு கண்டனம் தெரிவிச்சதா சொல்லிட்டு,
பக்கத்துல உட்காந்திருந்த என்ன பாத்து, ‘அவர் சொல்றது சரிதானே?’னு கேட்டான் என் பங்காளி.
அவன்கிட்ட, ’அப்போ துறவி ஆன அப்புறம், உலக இன்பங்களை எல்லாம், ’அந்த சாமியார்’ மாறி அனுபவிச்சா சரியா?’னு திருப்பி கேட்டேன்.
பங்காளி முறைக்குறான்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

அம்பிகா
அமெரிக்காவுக்கு open AI
சீனாவுக்கு deepseek AI
இந்தியாவுக்கு AI ADMK…

கங்கா
லக்கி பாஸ்கர் ராம்கி மாதிரி வந்து காப்பாத்துவாங்கனு பார்த்தா… சுப்பிரமணியபுரம் கஞ்சா கருப்பு மாதிரி ஏமாத்துறாங்க..

ArulrajArun
தொழிலாளர் சங்கம் வைப்பதற்க்கே இவ்வளவு போராட வேண்டி இருக்கே
தொழிலாளர் சங்கம் இல்லாத தொழிலாளி வேலை பார்க்கும் நிறுவனத்தில்
சம்பள உயர்வுக்கு எவ்வளவு போராட வேண்டி இருக்கும்..

✒️Writer SJB✒️
பால் பொங்கிடும்னு அடுப்பு கிட்டயே பாத்துட்டு நிற்போம் பால் பொங்காது
யார் காலிங் பெல் அடிக்கிறார்கள் என்று ஒரு நொடி திரும்பி பார்ப்போம், உடனே பால் பொங்கிடும்..!

பாலா
தம்பி ~ ஒருவனுக்கு எதிரி அதிகரிக்கிறது என்றால் அவன் வளர்ந்து வருகிறான் என்று அர்த்தம்
ஒருவனை எல்லாரும் சேர்ந்து அடிக்கிறார்கள் என்றால் அவன் திருட்டுப் பயல் என்று அர்த்தம்.

vijaychakkaravarthy
காலைல இவனுங்க போடுற motivation msg la வாழ்க்கைல ஜெயிக்கனும்னு ஒரு வேகத்துல வேலைக்கு போறோம்..
போற இடத்தில அவங்க பண்ற இம்சையில வேலைய முடிச்சு வரும்போது, உசிரு இருந்தா போதும்னு ஆய்டுதுடா..…இந்த motivation msgலாம் நிறுத்த சொல்றா

𝚂𝙸𝚅𝙰𝚁𝙰𝙹 𝙽𝙰𝙶𝙰𝚁𝙰𝙹𝙰𝙽
டூ BSNL
~ இப்ப கூட ஒன்னும் பிரச்சனை இல்ல டவர் மட்டும் சரி பண்ணு நீதான் No 1 ❤

ரவி
குப்பை வாங்குபவர் மனசு அழுக்காக இருக்குன்னு சொல்ல முடியாது,
குப்பை போடுபவர் மனது சுத்தமாக இருக்கும்ன்னு சொல்ல முடியாது…
லாக் ஆஃப்