இன்னைக்கு டீக்கடைக்கு போனப்ப, அங்க நண்பர் டீ குடிச்சிட்டு இருந்தாரு. அவர பாத்ததும் மனசுக்குள்ள அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. ஏன்னா அவரு விஜய் ரசிகர்.
வேணும்னே, அங்க இருந்த தினத்தந்தி பேப்பர பிரிச்சி… அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிச்சிருக்குற செய்திய சத்தமா படிச்சேன். அவரு கண்டுக்காத மாறி இருந்தாரு…
விடாம ’நண்பா… விஜய்க்கு ஏதும் விருது அறிவிச்சிருக்காங்களா?னு கேட்டேன். படார்னு என் பக்கம் திரும்பி, ’இப்ப என்ன அஜித் பத்ம விருது வாங்கிட்டாரு அதானே… விஜய் ஆ.வி விருது வச்சிருக்காரு… ஒன்னு இல்ல ரெண்டு இருக்கு’னு சொல்லிட்டு வேகமா போயிட்டாரு.
கடுப்பாயிட்டாரு போல… நாம டீ குடிப்போம்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

Poongulali
மகா கும்பமேளாவில் கண்ணீர் மல்க துறவறம் ஏற்ற நடிகை மம்தா குல்கர்னி ~செய்தி
அத்திவரதரை நயன்தாரா பார்த்த கதை தான், மொத்த கும்ப மேளா செய்தியும் இப்ப மம்தா குல்கர்னி செய்தி ஆனது

Mannar & company™🕗
மார்க் மை வேர்ட்ஸ்…
இனிமேல் என்னை “பத்மபூஷண்” அஜீத்குமார்னு அடைமொழி வச்சி அழைக்க வேண்டாம்னு சொல்லப் போறார்..!

சரவணன். 𝓜
ஹோட்டலில் விளம்பரத்திற்காக வைத்திருக்கும் உணவு வகைகளின் படங்களை படங்களை பார்க்கும் போது மை மைண்ட் வாய்ஸ்
~ உங்க ஹோட்டல் உணவை விட நீங்க வச்சிருக்கிற சாப்பாடு போட்டோ கற்பனையா இருந்தாலும் பார்க்க நல்லா தான்யா இருக்கு..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
நம்ம மனசு கூடவே தொடர்ச்சியா பேசறதை குறைச்சுட்டு மத்தவங்க கூட பேசறதை அதிகப்படுத்தினாலே, வாழ்க்கைல பாதி டென்சன் குறைஞ்சுரும்.

வரகன்
phone ‘னில் இருக்கும் நாலு App ‘பை சுற்றி சுற்றி வருவதிலே முடிந்து விடுகிறது, ஞாயிற்றுக்கிழமை!!
✒️Writer SJB✒️
போன வாரத்தை விட இந்த வாரம் கொஞ்சம் வெயிட் குறைஞ்சி இருப்பீங்களே,,?
அட ஆமா உங்களுக்கு எப்படி தெரியும் ??
ஒரு வாரமா நீங்க என் மைண்ட்ல ஓடிட்டே இருந்தீங்களே..!!!
வணங்கான்
உங்கள் தந்தை செய்ததெல்லாம் சரிதான் என்று நீங்கள் உணரும் வயதில்
நீங்கள் செய்வதெல்லாம் தவறு என்று சொல்ல உங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்திருக்கும்..!

கடைநிலை ஊழியன்
டெய்லி வீட்டுல கண்ணாடி பாத்து தலை சீவும் போது வர துயரத்த விட, சலூன் கடைல பின்னத்து கண்ணாடி வழியா, பின் தலைய பாக்கும் போது வர துயரம் தான் பெரும் துயரம் !!

சரண்யா
இங்க பாரு டி உன் புள்ளைய,
நாம அவன் கல்யாணத்துக்கு பத்து வருசமா பொண்ணு கிடைக்கலையே னு தேடிட்டு இருக்கோம்,
அவன் அண்ணாச்சி கடை ல தேன் முட்டாய் ல தேன் இல்லனு பிரச்சனை பண்ணிட்டு இருக்கான்…. 😶
லாக் ஆஃப்