இன்னைக்கு டீக்கடைக்கு வந்த நண்பன் ரொம்ப சந்தோசமா இருந்தான். இஎம் ஐ கட்ட காசில்லேயேனு வருத்தப்பட்டு இருந்த எனக்கு அத பாத்து ரொம்ப காண்டா இருந்துச்சி…
டேய் ஏண்டா இப்படி ஹேப்பியா இருக்கனு கேட்டா…
‘மச்சான் என் தொகுதி ஈரோடு கிழக்கு… இந்த வருஷ பொங்கலுக்கு போனஸ் போடுவாங்க.. அதவிட இப்போ இடைத்தேர்தல் அறிவிச்சதால. எங்களுக்கு பணத்த வாரி இறைப்பாங்க..
சோ இந்த வருஷம் எங்களுக்கு பொங்கலோ பொங்கல்னு சொல்லிட்டு கிளம்பிட்டான்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க

Tamil_Typist
நேற்று ரேஷன் கடை வாசலில் பொங்கல் பரிசு கூப்பன் க்யூவில் கண்டது
30 வயதுக்கு கீழே உள்ள ஒரு நபர் லேப்டாப்புடன் டீம் மீட்டிங்கில்
#Work From Ration Shop போல

วiຖ໐
படிப்படியாக ஏறுகிறவர்கள் என்றாவது சிகரங்களை பிடிக்கலாம்.
ஆனால், சிலர் பறந்தே அடைந்துவிடலாம் என இறக்கைகளுக்காக காத்திருந்து உறங்கிவிடுகின்றனர்.

iQKUBAL
யானைக்கும் அடி சறுக்கும்..
மீ ~ எப்ப பாத்தாலும் சறுக்கிக்கிட்டே இருந்தா என்னடா பண்றது. ????

ச ப் பா ணி
”அவர் வேலை பார்த்த பள்ளிக்கூடம் வழியாகத்தான் அருணாசலம் வாத்தியாரைத் தூக்கிக் கொண்டு போனார்கள். காரை பெயர்ந்த கரும்பலகைக்கு உள்ளிருந்து எட்டி பார்த்தன
அகர முதல எழுத்தெல்லாம்”.
-கல்யாண்ஜி

????????Little princess ????????
வருஷம் வேகமா போகுதேன்னு கவலபடாம…
Emi கொறஞ்சிட்டே வருதேன்னு சந்தோஷப்படுங்க…????????

manipmp
“சீனி போடாம டீ குடிங்க, உடம்புக்கு நல்லது”
“சீனி போடாட்டி அது டீ இல்ல, கழனித் தண்ணிடா”
-சுகிர்தராஜா

✒️Writer SJB✒️
உன் பணக்கார அப்பா காசுல ஆடி கார் வாங்கி உட்கார்ந்து போறது பெருமைன்னு நீ நினைக்கிற,,
நான் சம்பாதிச்ச காசுல வாங்குன நானோ கார்ல போறது கௌரவம்னு நான் நினைக்கிறேன்..!

david
ஸ்கூல் படிக்கும் போது நான் உன்ன ரொம்ப லவ் பண்ணேன் ஆனா பயத்தினால சொல்லாம விட்டுட்டேன்,,
அப்போ நான் கூட உங்கள லவ் பண்னேன்,,
அப்படியா உட்காரேன் கொஞ்ச நேரம் பேசலாம்,,
ஐயோ என் பேரன் ஸ்கூல்ல இருந்து வந்திருப்பான் அவனுக்கு டிபன் செய்யணும் நான் போறேன்..!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…