இன்னைக்கு டீக்கடைக்கு போனா, அங்க நண்பர் ஒருத்தர் சந்தோசமா டீக்குடிச்சிட்டு இருந்தாரு…
அண்ணே, என்ன விஷயம்னு கேட்டா.. “நானும் மாமியாரும் ட்ரெயின்ல கதவு பக்கம் நின்னு போகும்போது மாமியார் கீழே விழுந்துட்டாங்க”னு சொன்னாரு…
அய்யய்யோ என்னாச்சு? செயினை பிடித்து இழுத்தீங்களா? அவங்கள காப்பாத்தீட்டிங்களா?னு கேட்டேன்.
அதுக்கு அவரு… ‘இழுத்தேன் ஆனா தங்கசெயின் மட்டும் கட்டாகி கைக்கு வந்துச்சு… மாமியார் விழுந்துட்டாங்க… நீங்க ஃபீல் பண்ணாதீங்க… டீய குடிங்க’னு கூலா சொல்றாரு..
அந்த அளவுக்கா மாமியார் தொல்ல இருக்கு… என்னத்த சொல்ல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
mohanram.ko
ஜிடிபி குறைவா இருக்கே, என்ன பண்ண போறீங்க
ஜி யோட டிபி யை வாட்ஸ் அப் ல வைக்க சொல்ல போறோம்… ஜி’டிபி அதிகமாயிடும்…
remo
மகளிரின் உரிமைத் தொகையாக இருப்பது, கணவனின் சம்பளமும் தான்
????????????????????????????
நம்மை கண்டுகொள்ளாதவர்களிடம் சென்று நம்மை ஞாபக படுத்தனும்னு அவசியம் இல்லை!!!
மீ டூ தட் கண்டுக்காதவன் ~ அடேய் நான் உனக்கு கடன் கொடுத்தவன்டா
Dr. M. A. N. Loganathan
இரண்டு சைக்கோக்களுக்கு நடுவுல சிக்கிச் சீரழிஞ்சாச்சு மாமா..
பச்சப்புள்ள ராஷ்மிகாவா மாப்ள?
பார்க்கப் போனவன் பூராவும் மாமா..
~ புஷ்பா 2 பரிதாபங்கள்
????????????????
Me : எல்லாருக்கும் விதியை கடவுள் எழுதுறாரு! எனக்கு மட்டும் நியூட்டன் எழுதி இருக்காரு போல????
நண்பன் : எப்படி சொல்ற?
Me : அதான் வாழ்க்கையில எவ்வளவு வேகமா மேல போனாலும் உடனே கீழ வந்துடறேன்ண்ணே ????????????????????????
Mannar & company™????
6 மணிக்கு ஒரு வாட்டி
7 மணிக்கு ஒரு வாட்டி
பாத்ரூம்ல ஒரு வாட்டி
வந்தபிறகு ஒரு வாட்டி
சாப்பாட்டுக்கு பின் முன் ஒரு வாட்டி
வெளியே ஒரு வாட்டி
உள்ளே ஒரு வாட்டி..
புஷ்பா-2 பாடல்ல வர்ற மாதிரி உங்க மனைவியை அவ்ளோ லவ் பண்றீங்களா..?!
நீங்க வேற… நான் வாட்ஸ்அப்ல ஸ்டேட்ஸ் பார்ப்பேன்னு சொன்னேங்க!
✒️Writer SJB✒️
ஈருடல் ஓர் உயிராய் வாழும் தம்பதியர் கூட
தனித்தனி செல்போன் தான் பயன்படுத்துகிறார்கள்..!
~ தொழில்நுட்ப வளர்ச்சி
சரவணன். ????
சிகரெட் ,மது , போதை மருந்து பயன்படுத்துபவர்கள் சாகும் வரை இளமையோடு இருப்பார்கள்
ஆமாம் உண்மைதான்
அவர்களுக்கு முதுமை வருவதற்குள் மரணம் வந்துவிடும்..!
கனகு
காட்டில் இருப்பது பருத்தி, என் நெஞ்சில் இருப்பது நீ ஒருத்தி,,,????
வீட்டில் இருப்பது கிளாக், நான் உன்னை பண்ண போறேன் பிளாக்????
Sasikumar J
நமக்கு மகிழ்ச்சியை கொடுப்பவர்களை காட்டிலும் கஷ்டத்தை கொடுப்பவர்களே நமக்கானவர்களாக இருப்பார்கள்…!
புரியுதா…!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
’கடவுளே… அஜித்தே…’ கோஷம் : அஜித் கவலை!
டங்ஸ்டன் சுரங்கம் : திருமாவளவனிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர்