பாஜகல தன்னோட கட்சிய இணைச்சி சோசியல் மீடியால டிரெண்டிங்ல எடம்பிடிச்சிட்டாரு சரத்குமாரு. அதோட இத பத்தி நைட்டு 2 மணிக்கு தன்னோட மனைவிக்கிட்டே கேட்டதாவும், அதுக்கு அவங்களும், ”நீங்க எந்த முடிவு எடுத்தாலும், நான் உங்களோட உறுதுணையாக இருப்பேன்”னு சொன்னதாவும் சொல்லிருந்தாரு…
இத கேள்விபட்டதும் ரெண்டு நாளா என் மேல கோபமா இருக்குற பொண்டாட்டி மனசுல எடம்புடிக்க ஒரு ஐடியா கெடச்சுதுனே நெனச்சி வீட்டுக்கு வந்தேன்.
சாப்பிட்டு முடிஞ்சு நைட்டு நல்லா தூங்கிட்டு இருந்த என் பொண்டாட்டிய 2 மணிக்கு எழுப்பி.. ”நீ என் மேல எப்பவும் கோபமா இருக்க.. அதனால என்னோட வாழ்க்கைய உன் தங்கச்சியோட இணைச்சிருலாம்னு இருக்கேன். நீ என்ன நெனைக்குற?”னு தான் கேட்டேன்.
அதுக்கு போயி.. என் மண்டைய உடைச்சி ஆஸ்பத்திரில படுக்க வச்சிட்டா என் பொண்டாட்டி.
என்ன செய்ய சரத்குமாரு மாதிரி எனக்கும் 2 மணி ஒர்க் அவுட் ஆகும்னு நெனச்சது தப்பா போச்சி போல…
நீங்க அப்டேட் பாருங்க..
Kirachand
சரத்குமார், ஓபிஎஸ் வருகை பாஜக கூட்டணி வலிமை தரும்! – ஜி.கே.வாசன்
நோட்டாவை ஜெயிச்சிருவாங்களோ?
ச ப் பா ணி
அனைத்தும் அறிந்தவனை விட
அனைத்தையும் அடுத்தவனுக்கு அறிய வைப்பவனே பிரபலம்
this is me pic.twitter.com/dOAunQta2v
— Enez Özen (@Enezator) March 11, 2024
பர்வீன் யூனுஸ்
தேர்தல் நேரத்தில்
வீட்டு சிலிண்டர் விலையைக் குறைப்பதற்கும்
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்கும்
பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை.
ℳsd இதயவன்
சரத்குமார், ஓபிஎஸ் வருகை பாஜக கூட்டணி வலிமை தரும்! – ஜி.கே.வாசன்
சரி அவங்களுக்கு யார் வலிமை தர்றது ?!
ஏசுதாஸ்
என் மனதில் எழுந்த அந்த கேள்விதான் பாஜகவுடன் இணையக் காரணம்! – சரத்குமார்
அந்த கேள்வி இதுதான் ~ ‘உன் கட்சியில தான் யாருமே இல்லையே தனியா இருந்து என்ன செய்ய போற?’
ℳsd இதயவன்
மனைவி ராதிகாவிடம் கேட்டு சமகவை பாஜகவுடன் இணைத்தேன்! -சரத்குமார்
மாமியா நாகம்மாவை கேட்கலையா?!
𝐒𝐀𝐋𝐓 𝐜𝐢𝐭𝐲
மனைவியிடம் கேட்டு கட்சியை பாஜகவோடு இணைத்தேன் – சரத்குமார்
அப்போ பொதுக்குழு பொங்க வைக்கவா இருக்கு?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
விஜய்யின் கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் மகன்!
எலெக்ஷன் ஃபிளாஷ் : சரத்குமாருக்கு தேசிய அளவில் முக்கிய பதவி?