இன்னைக்கு மதியம் ஆபிஸ்ல நண்பன் ஒருத்தன்கிட்ட சாப்டியான்னு கேட்டேன்.
“இல்ல… இன்னைக்கு காலையில ஹோட்டல்ல மூணு தோச பார்சல் கேட்டேன். கடைக்காரன் இரண்டு தோச மட்டும் தான் பார்சல் கட்டிருக்கான். அதுலையே 45 ரூபா வேஸ்டா போயிட்டு. மதியமும் காச ரொம்ப செலவழிக்கணுமான்னு யோச்சிக்கிட்டு இருக்கேன்னு” சொன்னான்.
“டேய்… எவ்வளவு கலோரி இருக்குன்னு பார்த்து சாப்புடற ஆளு நீ. இப்ப என்னடான்னா, எவ்வளவு காசு இருக்குன்னு பார்த்து சாப்புடற நிலைமைக்கு வந்துட்டியேடான்னு” சொன்னேன்…
“என்ன நண்பா பண்றது. மாசக்கடைசின்னு” சொன்னான்…
“ஹேரிபார்டர் ஆல்சோ டீலிங் வித் த சேம் ப்ராம்பம்னு” சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
ஆவடையம்மா பக்கத்து வீட்டு திண்ணையில் உட்காந்திருந்தாள். உள்ளேயிருந்து அவள் சேக்காளிப் பொம்பளை வந்ததும் ரெண்டுபேரும் சேர்ந்து நாகலாபுரத்து டூரிங்டாக்கீசுக்கு சினிமா பாக்கப்போவதாக முதலிலேயே பேசி வச்சிருந்தாங்க..
ஆவடையம்மாளுக்கு எம்ஜியார்னா உசிர். மகாதேவி படம் ஓடுதுன்னு நோட்டீஸ் பார்த்ததிலிருந்து ஒரே பரபரப்பு அவளுக்கு. அதான் ரொம்ப முன்னாடியே வந்து காத்துக்கிட்டு இருக்கிறாள். “எப்படியும் இன்னைக்கு பார்த்துடணும்.”
கொஞ்சநேரம் கழிச்சு வெளியே வந்த சேக்காளிப்பெண், “இன்னிக்கு ஒண்ணும் முடியலை, அசதியாக இருக்கு. நாளைக்கு வேணா போகலாம்” என்றாள். இவளுக்கோ பொசுக்குன்னு போயிருச்சு. தனியாகவும் போகமுடியாது. காரணம், பஸ்ட் ஷோ முடிஞ்சு ஒண்ணரை மைல் தூரம் இருட்டுல தனியா நடந்து வரமுடியாது. வேறவழியில்லை, பல்லைக்கடிச்சுக்கிட்டு, “நாளைக்காவது சீக்கிரம் போறதுக்குப்பாரு” என்று கோபத்தை அடக்கிக்கிட்டு சொன்னாள்.
மறுநாள் சொன்னபடியே அவள் இவளைத்தேடி வந்து முன்னாடியே போய் தரை டிக்கெட் ல இடம் பிடிச்சு உக்காந்தாச்சு. ஆவடையம்மாளுக்கோ ஒரே குஷி. எம்ஜியார் படமாச்சே! “விநாயகனே வினை தீர்ப்பவனே!” முடிஞ்சதும் எழுத்து போட்டுட்டான். படம் ஓடியது.. பரபரப்பில் ஆவடையம்மா…
சாவித்திரியை அதாவது மகாதேவியை கடத்திக்கொண்டுவந்து சிறை வைத்திருக்கும் பி.எஸ்.வீரப்பா சாவித்திரியிடம், “என்ன முடிவு செய்திருக்கிறாய் மகாதேவி?” என்று கட்டைக்குரலில் கேட்க, சாவித்திரியோ, “என் முடிவைத்தான் நான் நேற்றே சொல்லி விட்டேனே!” என்றாள் தோரணையாக…
ஒரு வினாடியில் கோபத்தின் உச்சிக்கே போய்விட்ட ஆவடையம்மா, பக்கத்து வீட்டு சேக்காளிக்காரியின் கன்னத்தில் பளாரென்று ஒன்று விட்டாள். கோபம் அடங்காமல் கத்தினாள்…
“நாம நேத்து வந்திருந்தா சாவித்திரி என்ன முடிவு சொன்னாள் னு தெரிஞ்சிருக்குமில்லடி? உன்னால இப்ப எல்லாம் நாசமா போச்சு போ.. நல்லாயிருப்பியா நீயி…”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரிசாக கொடுங்கள்” – மோடி அட்வைஸ்!
சசிக்குமாரை அந்தளவுக்கு கொடுமைப்படுத்தினேன்- நந்தன் படம் குறித்து இரா. சரவணன் உருக்கமான பதிவு!