ஒரு கடி ஒரு குடினு ஃபார்முலா வச்சிருக்கோம்ல. அதுப்படி டீக்கடையில மெது வடைய எடுத்து ஒரு கடி கடிச்சிட்டு டீய குடிச்சிட்டிருந்தோம். அப்பதான் மோடி வடை சுட்ட கதைய டீக்கடை டிவியில சொல்லிக்கிட்டிருந்தாரு ஸ்டாலின். நான் மாஸ்டர்கிட்ட, ‘என்ன மாஸ்டர் உன்னை விட ஒருத்தரு சூப்பரா வடை சுடுறாரு பாத்தியா’னு கேட்டேன். அதுக்கு அந்த மாஸ்டர், ‘நான் வடை சுட்டா அது நாளைக்கு ஊசிடும்டா. ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா மோடி சுட்ட வடை ஊசிப் போனா கூட அதை மேக்கின் இந்தியா ஊசினு அதுக்கு ஒரு ஆயிரம் கோடி செலவு பண்ணி விளம்பரம் போட்ருவாங்கடா’ னு ஒரு விளக்கம் கொடுத்தாரு. மாஸ்டர் நீ உண்மையிலயே மாஸ்டர்தான்யானு பாராட்டிட்டு தின்ன வடைக்கும் டீயிக்கும் காசைக் கொடுத்துட்டு வந்தேன்.
நீங்க அப்டேட் பாருங்க…
குருநாதா
வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன் மனுஷன இன்னும் பாக்கலியே..
நேர பாருய்யா, மேலயும் கீழயும் பாத்தா எப்டியா தெரியும்.
பாக்டீரியா
மோடிக்கு ரெண்டே வார்த்தை தான்:
ஒன்னு நான் ஏழை தாயின் மகன் இன்னொன்னு எல்லாத்துக்கும் காரணம் நேரு…
ஷேக்பரித்
ஊழலை ஒழிக்க நடைபயணம் போய்கிட்டு இருக்கீங்களே இதுவரை ஏதாவது வெளிக்கொணர்ந்தீங்களா?
ஆங்.. எங்க ஜி பண்ண ஊழலை CAG வெளியிட்டுருக்காங்க..
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
திருப்பதியில் பக்தர்களை மிரட்டி வந்த சிறுத்தை பிடிபட்டது
கம்பு வேஸ்டா போச்சே..
Siva Subiramanian
தேர்தலுக்காக பல ஸ்பெஷல் வடைகளை சுட்டார் பிரதமர் மோடி”- மு.க.ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து என #பனியாரமே சுட்டிங்களே?
Mr.Ego
“சாமி” , “அய்யரே” போயி…
“அண்ணே என் ராசிக்கு ஒரு அர்ச்சனை பண்ணுங்க”
-செமல
கடைநிலை ஊழியன்
மஸ்க் – யாரு டா நீங்க.. காசு குடுத்து வாங்கி X னு அழகா பேரு வச்சா..
நீங்க பாட்டுக்கு Dad_Son_Twitter Dad_Daughter_Twitter Mom_Son_Twitter Mom_daughter_twitter னு டேக் போட்டுட்டு இருக்கீங்க..
குருநாதா
ஆகஸ்ட்டுல கல்யாணம் பண்ணா அடுத்த
10 மாசத்துல புள்ள பொறக்கும் அதுவும் ஜூன் மாசம்…
சோ புள்ளைங்கள ஸ்கூல்ல சேக்க ஈசியா இருக்கும் ..
முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை
Sasikumar J
ஆடி முடிஞ்சா போதுமே உடனே கல்யாண பத்திரிக்கை எடுத்துட்டு வரிசையா வந்துருவிங்களே….!
myck
“என்னது, கல்யாணத்துக்கு மாப்பிள்ளை ஜாமீன்’ல வந்திருக்காரா..?”
“ஆமாம் நாங்கதான் முன்னாடியே சொன்னோமே..மாப்பிள்ளை போலீஸ்’ல இருக்கார்’னு
கோழியின் கிறுக்கல்!!
எதிரில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதை,
அவர் பேசும் பொழுது கைப்பேசியை பார்க்காமல் இருப்பது தான்!!!
லாக் ஆப்-
“3டி தபால் நிலையம் இந்தியாவின் அடையாளம்” – மோடி
தலைமை செயலகத்தை இடமாற்றம் செய்வதா? – ஓபிஎஸ் காட்டம்!