அவரு தேனீர் விருந்தை ஒத்தி வச்சா என்ன? நாம வழக்கம்போல சாயந்தரம் டீக்கடைக்கு போனோம். நம்ம சிஎம்மும் அதாங்க சீஃப் மேனேஜரும், ஆபீஸ்ல வேலை பாக்குற கிண்டி கிருஷ்ணாவும் கூட வந்தாப்ல. பேச்சு அப்படியே டீ பார்ட்டி பக்கம் போச்சு.
‘அடடா… என்ன ஒரு கருணை உள்ளம் பாத்தீங்களா நம்ம கவர்னருக்கு… நீட் பரிட்சையில ஃபெயிலான போன ஒரு பதினெட்டு வயசு பையனும், அவங்கப்பனும் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்ததைப் பத்தி கூட கவலப்படாம… ராஜ்பவன்ல இருக்குற புல்லெல்லாம் மழை நீர்ல மூழ்கிடுச்சுனு சொல்லி தேனீர் விருந்தை ஒத்தி வச்சிட்டாரு பாரு. அதாங்க இதயம்… அதைப் புரிஞ்சுக்காம என்னென்னமோ பேசிக்கிட்டிருக்கீங்க?’னு கிண்டி கிருஷ்ணா கேட்டாப்ல.
சரிதான்யா… உன் டீக்கும் போன் பே பண்ணிட்டேன்னு சொல்லி சிஎம் சிரிக்க நம்ம தேனீர் விருந்து நல்ல படியா முடிஞ்சது.
நீங்க அப்டேட் பாருங்க…
ℳsd 🇮🇳❝இதயவன்
இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவைப்படுகிறது ~ மோடி
இன்னும் பத்து பதினைஞ்சு வருஷத்துக்கு என்னையவே பிரதமர் ஆக்குங்க னு கேட்கிறாராமாம்?!
ஜோ…
மணிப்பூர்ல யார் ஆட்சி நடக்குது?
ஜி ~ எங்க ஆட்சிதான்.
ஒன்றியத்துல யார் ஆட்சி?
ஜி ~ நாங்கதான்
சட்டம், ஒழுங்கு யார்கிட்ட இருக்கு?
ஜி ~ எங்ககிட்டதான்.
இன்டர்நெட் சேவையை முடக்கியது யாரு?
ஜி ~ நாங்கதான்.
இப்போ சொல்லு, கலவரத்துக்கு யார் காரணம்?
ஜி ~ காங்கிரஸ்தான்ங்க காரணம்
Mannar & company
ஏன்னே அவனை அடிக்கிறீங்க?
பின்னே என்னப்பா தேசிய கொடி வாங்க வந்தவன் இதுல வேற கலர் இருக்கான்னு கேட்குறாம்பா..
செங்கோட்டையில் பேசி கொண்டு இருக்கும் போது திடீரென கண் கலங்கிய ஜீ…🥹 pic.twitter.com/s6o25k8WfU
— James Stanly (@JamesStanly) August 15, 2023
கடைநிலை ஊழியன்
சுதந்திர தினம் கொண்டாடுனேன் னு சொன்னியே.. அப்படி என்ன பண்ணுன..
நேத்து நைட்டே whatsapp, facebook ல dp ய மாத்திட்டேன்.. இன்னைக்கு டிவி ல ஜெய் ஹிந்த் படம் பாத்தேன்..
மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩
உதான் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 93% வழித்தடங்களில் விமான சேவையே தொடங்கப்படவில்லை ~ சி. ஏ. ஜி. அறிக்கை
தூ.. இந்த திட்டதுக்கு பேரு உதான் இல்லடா.. உடான்ஸ்?!
கோவிந்தராஜ்
டேய் எந்திரி… நம் நாட்டு பிரதமரின் பணிகள் என்னன்னு சொல்லு…!?
அதுவா சார்…. சுதந்திர தினத்துக்கு கொடி யேத்துவாரு சார்… மத்த தினங்களில் பெட்ரோல் டீசல் காஸ் சிலிண்டர் வெலையை ஏத்துவாரு சார்…
மயக்குநன்
ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல், ஒரு நாளைக்கு 17 மணி நேரம் பிரதமர் மோடி ஓய்வின்றி உழைக்கிறார்!- அமித்ஷா.
ஓகோ… அதான் மணிப்பூருக்கு போகக் கூட நேரம் கிடைக்கலை போல..?!
சரவணன். 𝓜
என்னங்க நாடகம் எல்லாம் முடிஞ்சிடுச்சா..
~ காலையில் ஏதுடி சீரியல்?
பிரதமர் கொடி ஏத்தப் போறதா சொன்னீங்களே..
கீழை மீம்ஸ்
சங்கி ~ வடை ( பொய் சொல்வதை) சுடுறதை இதோட நிறுத்திக்கலாம்லே?
ஜீ ~ நிறைய மாவை அரைச்சி வச்சிட்டேன், முடியிற வரைக்கும் சுட்டுகிட்டு தான் இருப்பேன்
அடுத்த முறை நான் கொடியேற்றும் போது சாதனைகளை கூறுவேன் ~ மோடி
அப்ப இதுவரைக்கும் சாதனையே செய்யலயா..?! pic.twitter.com/EIUkdemUnt
— மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁 (@sultan_Twitz) August 15, 2023
balebalu
எதுக்குடா சிரிக்குற ?
சிறந்த மாநகராட்சியா தாம்பரத்துக்கு இரண்டாம் பரிசு தேர்வு செஞ்சு இருக்காங்களே
அப்போ மத்த மாநகராட்சி எல்லாம்
நினைச்சேன் சிரிச்சேன்
-லாக் ஆப்
ஐசிசி உலகக் கோப்பை டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!
”மோடி தேசிய கொடி ஏற்றுவார்…. ஆனால்”: மல்லிகார்ஜூனே கிண்டல்!
தூய்மை பணியாளரை கொடியேற்ற வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்
விளக்குகளை விஞ்சி ஒளிர்ந்த மெக்சிகோவின் மின்மினி கலைஞன்!