ஒரு 4 மணி இருக்கும்… நம்ம சிஎம்மும் அதாங்க சீஃப் மேனேஜரும், ஆபீஸ்ல வேலை பாக்குற கிண்டி கிருஷ்ணாவும் நம்ம பக்கத்துல வந்தாங்க…
’என்னய்யா ஒரே வைப் மோடுல இருக்க?’ன்னு கேட்டாங்க… ”வேற ஒன்னுமில்ல… என்னடா தலைவர் படம் ரிலீசாகி 6 நாளாகுது. இன்னும் இந்த டிக்கெட் கெடைக்க மாட்டேங்குதேன்னு கவலைல இருந்தேன். சரி தியேட்டர்ல இருக்குற போஸ்டரயாச்சி பாக்க போவோமேன்னு போனேன்.
அங்க போனா, நம்ம கடம்பூரு.. ’இந்தாயா ஜெயிலர் பட டிக்கெட்டு’ன்னு கைல தினுச்சாரு… ஆகா இன்னைக்கு யார பாத்த அதிர்ஷ்டம்னு தெரியலேயேனு உள்ளுக்குள்ள சிரிச்சிக்கிட்டே டிக்கெட் வாங்குனா…. ’யோவ் மறக்காம மாநாட்டுக்கு வந்துருய்யா… அதுக்குதான் இது’ன்னு சொல்லி போய்ட்டாரு…
அப்போ தான்யா தெரிஞ்சது… ஊர்ல ஆள கூப்ட்டு இழுத்து வந்தா தலைக்கு ஆயிரமும், ஒரு கோழி பிரியாணியும் கொடுக்கனும், அதுக்கு இப்படி டிக்கெட் கொடுத்து ஒரு டிரிக்ஸா முடிச்சிட்டாருளே நம்ம கடம்பூருன்னு நெனச்சிட்டு அப்படியே தலைவர் படம் பாத்துட்டு வந்துட்டேன்”ன்னு சொல்லி முடிச்சேன்…
இந்த கதைய சொல்லி முடிச்சதும் நம்ம கிச்சுனா நைசா நழுவ பாக்க… அப்படியே இழுத்து புடிச்சி டீக்கடைக்கு இழுத்துட்டு போயிட்டோம்…
சரி… நீங்க அப்டேட் பாருங்க…
ℳsd ❝இதயவன்❞
மோடியின் குடும்பம் இந்தியா; வீடு செங்கோட்டை: கார்கேவுக்கு தம்பிதுரை பதில் ~
ED அவரு பக்கம் வராத அளவுக்கு என்னமா கூவுறார்ய்யா?!
balebalu
இந்திய குடியுரிமை ஆதாரத்தை காட்டிய அக்ஷய் குமார் – செய்தி
ஒரு எம் பி சீட் பார்சேல்
H.Umar Farook
அமைதியின் மூலமே மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்! – மோடி
அதனால் தான் மணிப்பூர் பற்றி பேசச் சொல்லி எதிர்கட்சிகள் கேட்ட போது பேசாமல் அமைதியாக இருந்தீர்களா ?!
ச ப் பா ணி
Positive thinking என்பது எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம் என்பதன் வெளிப்பாடு.
ℳsd ❝இதயவன்❞
மோடியின் குடும்பம் இந்தியா; வீடு செங்கோட்டை: கார்கேவுக்கு தம்பிதுரை பதில் ~
இந்தியா குடும்பம்னா மணிப்பூர் மட்டும் ஏன் பங்காளிகள் ஆனங்க?!
மயக்குநன்
‘அதிகாரத்தின்’ மீதே எதிர்க்கட்சிகளுக்கு ஆசை!- பிரதமர் மோடி.
உங்களுக்கு மட்டும் என்ன ‘பலகாரத்தின்’ மீதா ஆசை இருக்கு..?!
நெல்லை அண்ணாச்சி
“பிரதமர் நரேந்திர மோதியின் ஆட்சியில் ஊழல் குறித்து எங்கேயாவது கேள்விப்பட்டுள்ளீர்களா?”-
நிர்மலா சீதாராமன்
# அங்க… என்னடே சத்தம்…
ரஃபேல் ✈️ விமானம்
ஏலேய் வாண்டு 😍😻 pic.twitter.com/EPxVaZ0blU
— black cat 2 (@Cat__offi2) August 16, 2023
H.Umar Farook
செய்தி : பேசிக் கொண்டிருந்த போது திடீரென கண்கலங்கிய மோடி
#இப்பவே தேர்தலுக்கு ஒத்திகை பார்க்க ஆரம்பித்து விட்டாரோ ?!
கோழியின் கிறுக்கல்!!
நம் Mind Voiceஐ நாம் நினைக்கும் முன்னே Catch செய்பவருக்கு பெயர் தான் மனைவி!
வசந்த்
கடைக்காரர் : எங்க போறீங்க தம்பி ஜெயிலர் படத்துக்கா?
அண்ணாமலை மைண்ட் வாய்ஸ் :- நாம ஊர் ஊரா நடக்குறது ஒருத்தருக்கும் தெரியாது போலயே.
லாக் ஆப்
”சந்திரமுகியோட பெஸ்ட் ஃப்ரண்ட் நான்தான்டா”: வடிவேலுவின் டப்பிங் அட்ராசிட்டிஸ்!
சுங்கச்சாவடி கட்டணம் : வாகன ஓட்டிகளிடம் சுரண்டும் மத்திய அரசு!