இந்த ஐபிஎல் மேட்ச் தொடங்குனதுல இருந்து ஒரு மேட்ச் கூட தோக்காம விளையாடிட்டு இருந்தாங்க இந்த கல்கத்தா பாய்ஸ்…
அந்த கெத்தோட சென்னைக்கு வந்த கம்பீர்… ‘என்ன பெரிய சென்னை… எல்லா ஏரியாலயும் நாங்க தான் கில்லினு சொன்னதோட, சிஎஸ்கேவ சொந்த மண்ணுல தோற்கடிப்போம் சவால் விட்டாரு…
ஆனா பாருங்க முதல் பந்துல விக்கெட் விழுந்ததுல இருந்து பேட்டிங்கும் வரல, பெளலிங்கும் வரலங்கிற மாதிரி சேப்பாக்கத்துல மொத்தமா செதறிட்டாங்க…
கடைசில கம்பீரமா பேச வேண்டிய கம்பீர இப்படி கவுத்து வுட்டானுங்க… கொல்கத்தாவுக்கு காப்பும் கட்டிட்டானுங்க..
நீங்க அப்டேஸ் பாருங்க…
நெல்லை அண்ணாச்சி
பிடிபட்ட ரூ.4 கோடி …நெல்லை தேர்தல் ரத்து (?)
# Great…எஸ்கேப்.. நயினார் நாகேந்திரன்…!!!
ச ப் பா ணி
மனைவியின் சம்மதம் மட்டும் மவுனமாய் வெளிப்படுவதில்லை
#என்னமோ செய்ங்க..
balebalu
பெருங்களத்தூர் ல’ ஸ்பெஷல் ஓட்டுச்சாவடி’ ஒன்னு வெச்சுடலாம்
டிராபிக் ஜாம் ல மாட்டுறவங்களை அப்படியே ஐடி சரி பார்த்து ஓட்டு போட சொல்லிடலாம்
ச ப் பா ணி
EMI ல் பணம் எடுக்கிற வரை கற்பைப் போல காப்பாத்த வேண்டியிருக்கு பேங்க் பேலன்ஸை
செங்காந்தள்
தயாரிக்க அதிகம் தண்ணீர் தேவைப்படும் ஜீன்ஸ் துணிகளால்
தண்ணீர் மிச்சப்படுவது முரண்…!!!
மயக்குநன்
மக்களவைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட 30% அதிகம் விற்பனையானால் விசாரணை!- செய்தி.
வேட்பாளர்கள் பணத்தை ‘தண்ணி’யா செலவழிக்கிறாங்களானு கண்காணிக்கிறாங்க போல..?!
balebalu
லெப்ட் Brain , ரைட் Brain ன்னு பேசுறாரே
அப்படின்னா என்ன அண்ணே
அடேய்
மூளை ன்னு ஒன்னு இல்லாதவங்க தான் அதை பத்தி ரொம்ப பேசுவாங்க
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
CSKvsKKR : முதல் பந்திலேயே மிரட்டிய துஷார்… கேகேஆர்-ஐ மொத்தமாக சுருட்டிய ஜடேஜா
மக்களவை தேர்தல் : ஐந்து இடங்களில் இருந்து 10,214 பேருந்துகள் இயக்கம்!