பன்னீர் ‘பழக்க’ தோஷம்: அப்டேட் குமாரு

அப்படி உட்கார்ந்து செல்போன்ல ஷார்ட்ஸ் ஓட விட்டுக்கிட்டிருக்கும்போது… ராம்நாட்ல பலாப்பழ சின்னத்துல நிக்கிற நம்ம ஓ.பன்னீர் அண்ணன் ஓட்டுக் கேக்குற வீடியோவ பார்த்தேன்.

‘நமது வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைக்கு’ அப்படினு கேட்டுட்டு, டக்குனு மாத்தி, ‘பலாப் பழ சின்னத்துக்கு’அப்படினு திருத்திக்கிட்டாரு. அதுக்கப்புறம் கண்ணைத் தொடச்சிக்கிட்டு, ‘பழக்கதோஷம்’ அப்படினு சொல்லி சமாளிச்சாரு.

உண்மைதான்… இரட்டை இலைனு சொல்லியே பல வருசமா தேர்தல்ல நிண்ட பன்னீர் அண்ணனுக்கு அப்படி சொல்றது பழக்க தோஷம்தான். அதேநேரம் இன்னிக்கு இரட்டை இலை கெடைக்காம அஞ்சாறு சுயேச்சைகள்ல ஒருத்தரா பலாப் பழ சின்னத்துல அவர் நிக்கிறதுக்கு காரணமும் அவரோட ‘பழக்க’ தோஷம்தான்…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Kirachand
அருணாசலப் பிரதேசத்தில் 30 பகுதிகளுக்கு பெயர் சூட்டிய சீனா!
அதான் கச்சத் தீவு பிரச்சனை குறித்த ரீல்ஸை ‘ஜி’ ஓட விட்டு இருக்காரோ?

நெல்லை அண்ணாச்சி…
மணிப்பூர்….எல்லையில்… ஊடுருவல்…
#அது கிடக்கட்டும்….கழுத….
எனக்கு இப்ப ” கச்சத்தீவு ” வேணும்..!!!

amudu
அதிமுகவால் தூக்கத்தை தொலைத்தவர் ஸ்டாலின். -இபிஎஸ்.
அந்த வேலையையெல்லாம் சொந்த கட்சிக்காரங்களே பார்த்துப்பாங்க.

பர்வீன் யூனுஸ்
செந்தில் பாலாஜி வலிமையான ‘செயல்’ வீரர் – ஸ்டாலின் # ஆனா இப்ப ‘ஜெயில்’ வீரர் ஆயிட்டாரரே?

balebalu
தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களும் எக்ஸாம் எழுதும் மாணவர்களும் ஒண்ணு
தேறுவோமா மாட்டோமா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்

ச ப் பா ணி
ஒரு மோட்டிவேசனல் புத்தகத்தால் தர முடியாத தன்னம்பிக்கையை ஒரு புது saree தந்துவிடுகிறது பெண்களுக்கு

ℳsd இதயவன்
மத்திய சென்னை தொகுதியில்
வேட்பாளரே இல்லாமல் வாக்கு சேகரித்த ஜி.கே.வாசன் ~
நாங்கெல்லாம் தொண்டரே இல்லாம கட்சிய நடத்துறவங்க போவியா?!

கோழியின் கிறுக்கல்!!
ஒரு கஷ்டத்தை சொல்லி புலம்பினா, திரும்ப திரும்ப போன் பண்ணி ‘எப்படி இருக்க?’ கேட்கிறான் நண்பன்!!

ஒருவேளை இவன் சரியாகிடுவானோங்கிற பயத்தில் கேட்கிறானோ!?

நெல்லை அண்ணாச்சி
மைசூரு மன்னருக்கு
சொந்த வீடு கார் இல்லை….
# எங்க மோடிஜிக்கும் தான்
இல்லை போவியா….!!!

amudu
கட்சத்தீவை மீட்க மோடிஜிக்கு, நான் உறுதுணையாக இருப்பேன். -ஒ.பி.எஸ்.

அதிமுக கட்சி கரை வேட்டியை கட்டும் உரிமையையும், அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமையையும் மீட்க முதலில் வழியைப் பாருங்க.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆப்

பிரபல குணச்சித்திர நடிகர் விஸ்வேஸ்வர ராவ் காலமானார்!

கச்சத்தீவை பற்றி பாஜக பேசுவது வேடிக்கையானது : எடப்பாடி பழனிசாமி

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts