அ.மலை பத்தி ஆறு மணிக்கு மேல அண்ணன் சண்முகம் உரையாற்றுவார்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்
 ‘என்னய்யா ஜெயக்குமார் பட்டுனு போட்டு உடைச்சுட்டாரு. அதிமுக-பிஜேபி கூட்டணி இனி கிடையாதா?’  இதுதான் டீ கடையில இன்னிக்கு  பெரிய பேச்சு. நம்ம மாஸ்டர், ‘நேத்து அண்ணாமலை  அதிமுகவோட சி.வி. சண்முகத்தை  ஆறு மணிக்கு மேல வேற மாரி பேசுவாருனு சொல்லி பங்கம் செஞ்சாரு. இன்னிக்கு ஜெயக்குமார் பதிலுக்கு பங்கம் பண்ணியிருக்காரு. அதையெல்லாம் விட   இன்னிக்கு அண்ணாமலைய பத்தி ஆறு மணிக்கு மேல மறுபடியும்  சி.வி. சண்முகம் பேசப் போறாராம்.  யு ட்யூப பாரு’னு மாஸ்டர் சொல்ல’ எல்லாரும் சிரிச்சுட்டாங்க.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க….
ஜோ
நார்த் சங்கீஸ் ~ நேத்து பூராம் “பிள்ளையார் சிலைய தூக்கி போட்டு உடைச்ச” பெரியாரை கொண்டாடிட்டு இருந்தாங்க,
இன்னைக்கு விநாயகர் சதுர்த்தின்னு விநாயகர்க்கு பூஜை பண்ணி, ஊர்வலமா போயி கொண்டாடுறாங்க.
கொஞ்சம் கூட இந்த தமிழ்நாட்டுக்காரங்கள பத்தி புரிஞ்சிக்கவே முடியல சார்..😏
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
அந்தகன் கிட்ட இருந்து இன்னைக்கு ரெண்டு வாழ்த்து வந்துருக்கனுமே.. வந்துச்சா இல்லையா..?
~விநாயகர் சதுர்த்தி & புரட்டாசி 1
சரவணன். 𝓜
அரை மணி நேரம் தாமதமாக வந்த இலங்கை ரசிகர்கள்
~ எங்கடா இங்க இருந்த மேட்ச்ச காணோம்..
Tamilarasan
மீ சர்ச்சிங் கூகுள் ~ எனக்காக பொறந்தவ எங்க இருக்கா?
கூகுள் ரிப்ளைடு ~அவ புருஷனோட சந்தோசமா இருக்கா,
மீ ~ 😒😒
ஜோ
இப்பிடி வீலிங் பண்ணி ஆக்சிடெண்ட் ஆனத பார்த்தாவது அவன் பேன்ஸ் திருந்துவாங்களான்னு பாத்தா அதான் இல்ல..
பசங்க பூராம் க்ரூப்பா வீலிங் பண்ற மாதிரி வீடியோ போட்டு Pray for TTF னு ட்ரெண்ட் பண்ணுவானுங்க. திஸ் 2k யான்ஸ்.
கார்த்திகேயன்
அவர்கள் ~ விநாயகர் சிலையை உடைத்த ஹிந்து விரோதி பெரியார்.
விநாயகர் ~ இன்னும் மூணு நாள்ல நீங்களே அதைத்தானடா பண்ணப்போறீங்க.
ஜோ…
ஜீ & கோ ~
ஜீ ~ ஏண்டா நாமளும் இந்த திமுக குடுக்குற மாதிரி மக்களுக்கு குடுத்த என்ன?
~ என்னன்ன திட்டம்னு சொல்லுங்க.. சொல்றேன்.
இந்த காலை சிற்றுண்டி திட்டம்?
~ அதுக்கு முத பசங்க படிக்க வரணுமே, நாமதான் இடிஞ்சு போற மாதிரில்ல ஸ்கூல்ஸ் வச்சிருக்கோம்.
அப்போ இலவசமகளிர் பேருந்து திட்டம்?
~ அதுக்கு முத நல்ல ரோட் போடணுமே
ஜி..நார்த்லதான் நிறைய ஊருக்கு ரோடே கிடையாதே.
அப்போ முத 100 யூனிட் இலவச மின்சாரம்?
~ இன்னும் நிறைய கிராமத்துக்கு கரண்டே குடுக்கலயே.
அப்போ உரிமைத்தொகை திட்டம்?
~ அதுக்கு மாநில வளர்ச்சி இருந்தாதானே அந்த வரிப்பணத்துல குடுக்க முடியும்.
அப்போ காப்பீட்டு திட்டம் மாதிரி?
~ அதுக்கு ஹாஸ்பிடல்ஸ் & டாக்டர்ஸ் வேணுமே. நாமதான் நீட் போட்டு படிக்கவே விடுறதில்லையே.
அப்போ வேற என்னதான் செய்ய?
~ படிக்காத தற்குறிகள வச்சு என்ன பண்ண, கலவரம்தான் பண்ண முடியும்.
Writer SJB
~ஹேப்பி விநாயகர் சதுர்த்தி டோலி
தேங்க்ஸ்
~அதெல்லாம் வேண்டாம். எனக்கு கொழுக்கட்டையும் சுண்டலும் தான் வேணும்
+1
6
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *