update kumaru 30-9-2023 trending tweets memes trolls

மூணு மாசத்துல நாலு மேட்டர்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

 

முக்கியமான நாலு மேட்டர மோடி மூணே மாசத்துல முடிச்சுட்டாருன்னு அமித்ஷா சொல்லிருக்காரு. நிலாவுக்கு சந்திராயன் அனுப்புனது, நாடாளுமன்றம் புதுசா கட்டினது, ஜி 20 மாநாடு போட்டது, மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தது இந்த நாலு முக்கியமான வேலைகளையும் மூனே மாசத்துல முடிச்சிட்டாராம் மோடி.

யப்பப்பா… விக்ரம் லாண்டர்ல ஏறி நிலாவுக்கு போயி அங்க இருந்துகிட்டு டெல்லியில் நாடாளுமன்ற கட்டிடத்தை கட்டி… அந்த கட்டடம் கட்டிக்கிட்டு இருக்கும்போது 33% இட ஒதுக்கீடு பேப்பர் டைப் பண்ணி… இந்த கேப்ல ஜி 20 மாநாட்டில் உட்கார்ந்து‌… அடேங்கப்பா… திருநெவேலிக்கு வந்தே பாரத் டிரெயின செக் பண்ணி விட்டதும் மோடிதானப்பா! அமித்ஷா அதை மறந்துட்டாரே…

நானு மூணு மாசத்துல நாலு மேட்டர… முடிக்க முடியுமான்னு பாக்குறேன்.

நீங்க அப்டேட்ட பாருங்க!

சப்பாணி
ஒரு salary credited மெசேஜ் தரும் நம்பிக்கையை.. எந்த ஒரு சுயமுன்னேற்ற புத்தகமும் தந்துவிடுவதில்லை.

சரவணன். 𝓜
ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்.7 வரை நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி
அதான் யாரு கிட்டேயும் பணம் இல்லையே, அப்புறம் யாருக்குடா நீட்டிப்பு பண்றீங்க?

balebalu
வந்தே பாரத்துக்காக பிற எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் குறைப்பு – செய்தி
ஓரம்போ ஓரம்போ வந்தே பாரத் ரயில் வருது.

Sasikumar J
செய்தி : ரூ.2000 நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு RBI அறிவிப்பு…
எவ்வளவு அவகாசம் கொடுத்தாலும் மாற்றுவதற்கு 2000 ரூபாய் நோட்டு இல்லை என்பதை உணர்கிறான் வீரன்…!

Mannar & company
கலோரி எவ்வளவு இருக்குன்னு பார்த்து சாப்பிடுறது மாசத்தின் முதல் வாரத்தில்,
காசு எவ்வளவு இருக்குன்னு பார்த்து பார்த்து சாப்பிடுறது மாசத்தின் கடைசி வாரத்தில்!
மாசக்கடைசி

update kumaru 30-9-2023 trending tweets memes trolls

சரவணன். 𝓜
30 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி விட்டேன் – பிரதமர் மோடி.
அடுத்த வருஷம் மட்டும் நாடாளுமன்ற தேர்தல் வராம இருந்திருந்தா ஒன்பது வருஷம் சும்மா இருந்த மாதிரியே இருந்திருப்பிங்கல்ல..

update kumaru 30-9-2023 trending tweets memes trolls

Kirachand
காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் தூய்மை பணிகளில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும்! – பிரதமர் மோடி
தூய்மை பணியில் ஈடுபடுவது போல் எடுக்கும் போட்டோ ஷூட்டுக்கு நீங்களும் ரெடியாகணுமே ஜி!

update kumaru 30-9-2023 trending tweets memes trolls

லாக் ஆஃப்

ஆசிய போட்டிகள் 2023: 10 தங்கம், 14 வெள்ளி, 14 வெண்கலம், 4வது இடத்தில் இந்தியா!

குன்னூரில் பள்ளத்தில் பேருந்து கவிந்து விபத்து: 8 பேர் பலி!

+1
1
+1
8
+1
0
+1
2
+1
0
+1
0
+1
2

1 thought on “மூணு மாசத்துல நாலு மேட்டர்: அப்டேட் குமாரு

  1. Karnadaka vil tamilan naditha padathirukku peati kooda kudukka Vida matendranga. But namma Tamil naatil karnadaka karana thalaiyil thooki vachu aaduranunga. Idha nenaikkumbothu thamilan solla asingama irukku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *