Mr. அண்ணாமலை 6 மணிக்கு மேல் சி.வி.சண்முகம் பேசுவார்: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னிக்கு நம்ம ப்ரண்டோட கடைக்கு டீ குடிக்க போனோம்… அங்க ரெண்டு பேரு இன்னிக்கு அண்ணாமலை பேசுனத பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க…
ஒருத்தர், “எடப்பாடியார் என்கிட்ட போன்ல பேசிக்கிட்டு தான் இருக்காரு, எதுவா இருந்தாலும் என்கிட்ட போன்லையே பேசிருக்கலாம்ல” னு அண்ணாமலை சொல்லிருக்காருனு அதிமுக பாஜக பிரச்சினைய பத்தி பேசிட்ருந்தாக.
அதுக்கு இன்னொருத்தரு, ஆமாயா சி.வி.சண்முகம் ஆறு மணிக்கு மேல வேற மாதிரி பேசுவாருனும் சொல்லராருயானு சொல்ல,
அப்படினா நாளைக்கு 6 மணிக்கு மேல சி.வி.சண்முகத்த எடப்பாடி பேச சொல்லுவாரா இருக்கும்னு பரபரப்பா அரசியல் பேசிகிட்டு இருந்தாங்க…
அதே கேட்டுகிட்டே நாங்க டீய குடிச்சிட்டு கிளம்பிட்டோம்…
நீங்க அப்டேட்ட பாருங்க…

கடைநிலை ஊழியன்
to Ajith fans –
பாரதியார் என்ன சொல்லிருக்காரு..
அப்டேட்டுக்கு எல்லாம் அப்டேட் வலிமை அப்டேட்.. அவ் அப்டேட்டை விட பெரியது விடாமுயற்சி அப்டேட்.. சொல்லிருக்காரா இல்லயா..

தர்மஅடி தர்மலிங்கம்
“செந்தில் பாலாஜி சேராத கட்சி பாஜக மட்டும்தான்” – அண்ணாமலை!
அதுக்காக…. நீங்க ஒன்னும் பாஜகவில சேர்த்துக்க முயற்சி பண்ணலையே..?!

கடைநிலை ஊழியன்
கடவுள் பேச்சுலர் ‘க்னே படைச்ச ரெண்டு விஷயம்..
ஒன்னு maggi noodles.. இன்னொன்னு bread omelette..

மயக்குநன்
தமிழகத்தில் குற்றங்களை அதிகமாக செய்வது திமுகவினர்தான்!- சசிகலா.
தமிழகத்துக்கு கெட்ட பெயர் வந்துடக் கூடாதுன்னுதான் பெங்களூரு சிறையில் ஷாப்பிங் போனீங்களோ சின்னம்மா..?!

தர்மஅடி தர்மலிங்கம்
அது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அல்ல; அது ஒரு கும்பல்!” – ஓ.பி.எஸ்!
அந்த ‘கும்பல்’ கூட உங்ககிட்ட இல்லைன்னு தான இந்த ‘புலம்பல்!’

Kirachand
பிரதமர் மட்டும் ஒரு உரையை தமிழில் நிகழ்த்தி விட்டால் திமுக அன்றோடு காலி! – அண்ணாமலை
என்னப்பா தமிழுக்கு வந்த சோதனை?i

கடைநிலை ஊழியன்
ஒரு மாவு பாக்கெட்ட வாங்கிட்டு, சாம்பாருக்காக கூடவே அஞ்சு இட்லி பார்சல் வாங்கிட்டு வரான் பாரு, அவன் தான் பட்ஜெட் பத்மநாபன் !!

கோழியின் கிறுக்கல்!!
உங்களுக்கு “ராமன்” சாமி! எங்களுக்கு ராமசாமி!!
-பெரியார் பிறந்தநாள்

சரவணன். 𝓜
அரை மணி நேரம் தாமதமாக வந்த இலங்கை ரசிகர்கள் ~ எங்கடா இங்க இருந்த மேட்ச்ச காணோம்..

லாக் ஆஃப்

“மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது” – ஜெயக்குமார்

சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!

 

+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *