நேத்து தைப்பூசம்… பழனிக்கு போகலாம்னு பாத்தா… தொடர்ந்து லீவு இல்ல. அதனால காலையிலேயே எந்திரிச்சு பக்கத்துல இருக்குற முருகர் கோயிலுக்கு போலாம்னு போனேன்.
அங்கே போனா, அங்க பூ விக்குற தம்பி, ’அண்ணே… இன்னைக்கு கூட்டம் அதிகமா இருக்கு, இப்போ முருகர் ரொம்ப பிசி… நீங்க வேணா அவுக அண்ணன் கணேசர கும்பிட்டு வந்துருங்க… அதுக்குள்ள கூட்டம் காலியாயிரும்னு… நேக்கா ஒரு மாலைய எங்கிட்ட வித்துட்டான்.
சரினு போயி கணபதியார கும்பிட்டு, திரும்புறதுக்குள்ள கோயில் வாசல்ல கால் வைக்க முடியாத அளவுக்கு சரியான கூட்டம்… முருகன பாக்க முடியாத ஏக்கத்துல ’என்ன கொடும சரவணன் இது’னு கோயில் கோபுரத்த பாத்து கும்பிட்டு ஆபிஸ் கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

சரவணன். 𝓜 Update Kumaru 005
தற்போது பட்ஜெட்டை தயார் செய்வது மிகவும் சவாலாக மாறிவிட்டது… – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இருக்காதா பின்னே.. எதெதுக்குலாம் இன்னும் ஜிஎஸ்டி போடாம இருக்குன்னு கண்டுபிடிக்க பயங்கர கஷ்டமா இருக்கும்ல்ல..

தர்மஅடி தர்மலிங்கம்
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மலர அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!
அதுக்கு…. மொதல்ல உங்களை அதிமுகவுல ஒன்றினைக்கனுமே.?!

ArulrajArun
தைப்பூச திருவிழாவை ஒட்டி பழனியில் காவடி எடுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!
ஓ இதுதான் நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் உனக்கு ஓட்டு போட மாட்டாங்க ன்னு சொல்றதோ.

Writer SJB
இன்னைக்கு ப்ராமிஸ் டே ஒரு ப்ராமிஸ் பண்ணட்டுமா?
பண்ணு….
இந்த ஜென்மத்தில் நீ தான் என் பொண்டாட்டி…
சத்தியமா?…
என் பொண்டாட்டி மேல சத்தியமா..!!!
{சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க}

ச ப் பா ணி
அப்பா என்பவர் செல்போன் சார்ஜர் போல.. இருக்கும் போது அருமை தெரியாது. இல்லாதபோதுதான்…

ச ப் பா ணி Update Kumaru 005
இளமையில் சுகர் நமக்கு பிடிக்கும்;
முதுமையில் சுகருக்கு நம்மை பிடிக்கும்!!!

கோழியின் கிறுக்கல்!!
என் தன்னம்பிக்கை, தலைக்கனமாக தெரிவது,
உங்களின் பார்வை குறைப்பாடு.

லாக் ஆஃப் Update Kumaru 005