இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க? – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தப்ப… ’ஈரோடு கிழக்குல நாங்க தான் ஜெயிக்க வேண்டியது தேர்தல் ஆணையம் தான் மாத்தி அறிவிச்சிடுச்சி’னு நாதக தம்பி ஒருத்தரு சொல்லிட்டு இருந்தாரு.

இதென்னடா, புது புரளியா இருக்குனு, விசாரிச்சேன், அதுக்கு அந்த தம்பி, “நீங்க வேணா பாருங்க… எங்க யூடியூப் சேனல்ல ஒவ்வொரு வீடியோவும் 1 லட்சம், 2 லட்சம், 3 லட்சம் வியூஸ் வர போயிருக்கு. இப்போ புரியுதா.. திமுக வந்த ஒரு லட்சம் வாக்கு எங்களோடது. தேர்தல் ஆணையம் தான் தப்பா சொல்லிருக்குனு மறுபடியும் முதல்ல இருந்து வந்தாரு.

ஆத்தாடி… லைக்ஸ்க்கும், வோட்ஸ்கும் வித்தியாசம் தெரியலையே… இன்னும் கொஞ்சம் நேரம் பேச்சு கொடுத்தா, இவரு உருட்டுற உருட்டுல நமக்கு காது போயிரும்னு அங்கேயிருந்து கெளம்பிட்டேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க… Update Kumaru 004

Update Kumaru 004

balebalu
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனு
தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் – செய்தி
அவரு மசோதாவை கிடப்புல போடுறாரு இவங்க தீர்ப்பை கிடப்புல போடுறாங்க

ArulrajArun
எல்லா கட்சியிலும் இருக்கிற உட் கட்சி பூசலை சரி செய்தாலே தமிழ்நாட்டுல பாதி பிரச்சனை சரியாயிடும் போல … Update Kumaru 004

Update Kumaru 004

கடைநிலை ஊழியன்
my mobile to me – Update Kumaru 004
unlock பண்றான்.. சும்மா ரெண்டு App ஓபன் பண்ணுறான்.. மேலையும், கீழையும் scroll பண்றான்.. திரும்ப lock பண்றான்..
இதே தான், திரும்ப திரும்ப பண்றான்.. கேட்டா ரொம்ப busy னு சொல்றான்..

Update Kumaru 004

ச ப் பா ணி Update Kumaru 004
அன்னலும் நோக்கினார்..அவளும் நோக்கினாள்..
“ஆன் லைனில்”! Update Kumaru 004

தர்மஅடி தர்மலிங்கம் Update Kumaru 004
மகா கும்பமேளா உயிரிழப்பு ”இது பெரிய சம்பவமே அல்ல” – பாஜக எம்பி ஹேம மாலினி!
அதான… இவங்க மணிப்பூர் மக்கள் உயிரிழந்த போதே பெரிய விஷயமாவே எடுத்துக்கலையே.?!

Update Kumaru 004

Sasikumar J
வீட்டுல துவைக்க போட்ட பேண்ட்ல இருக்கிற காசு மட்டும் தெரியும் கர்சீப் கண்ணுக்கு தெரியவே தெரியாது…!

மயக்குநன் Update Kumaru 004
ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தினால் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இன்றி செல்லலாம்!- நிதின் கட்கரி.
ஒரே ரோடு, ஒரே ரேட்டு..!

Update Kumaru 004

ச ப் பா ணி
பிரச்சனையை கொடுத்த கடவுள் தான்.. அதை யார் மேல தூக்கிப்போடலாம்னு யோசனையும் தருவாரு
-God is great

mohanram.ko
டெல்லியைப்போல தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட மக்கள் விரும்புகிறார்கள். -இபிஎஸ்.
அதுக்கு தேர்தலில் போட்டி போடணுமே
அய்யோ, அதை மறந்துட்டேனே

Update Kumaru 004

மயக்குநன்
டெல்லியை துடைப்பம் சுத்தம் செய்யும்னு பார்த்தா… துடைப்பத்தையே சுத்தம் செஞ்சிட்டாங்க போல..?!

கோழியின் கிறுக்கல்!!
எந்த உறவிலும் கொடுத்த பரிசுப் பொருட்களை விட,
கழித்த நிமிடங்களே, நினைவுகளாக நிலைத்து இருக்கும்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share