இன்னைக்கு டீக்கடைக்கு போனப்ப, நடுவில் பிறக்கும் குழந்தைகள் தான் நேர்மையானவர்கள்னு ஒரு ஆய்வறிக்கை சொல்றதா பேப்பர்ல போட்டுருந்துச்சு.
இத பாத்ததும் மனசுக்குள்ள நெறய கேள்வி வந்துட்டுது…
அப்ப முதலும், கடைசியும் பொறந்தவங்க எல்லோரும் திருடுவாங்களோ?
இல்ல நேர்மையான குழந்தை கிடைக்க மூணு குழந்தைய பெத்துக்கணுமா?
ஒருவேள நாலாவதா, அஞ்சாவதா பொறந்திருந்தா அவங்கல்லாம் எப்படி? இப்படி பல கேள்வி வந்துடுச்சி… இதுக்கெடையில டீயும் காலி ஆயிருச்சி.. கிளம்பிட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

பூதம்
“இது சேர, சோழ, பாண்டியர் மண்!”
“எதனால அப்படி?”
“ஏன்னா அவங்கதானே பிரம்மதேயம், சதுர்வேதி மங்கலம்கிற பேர்ல பார்ப்பானுங்களுக்கு நிலத்தை இலவசமா அள்ளி அள்ளி கொடுத்தாங்க!”
ச ப் பா ணி update kumaru 003 Tamil Memes Trolls
குடித்துவிட்டு புலம்பும் இடம் தான் ‘வலி பாட்டுத் தளம்’

Mannar & company
திங்கட்கிழமை காலையில் தூக்கம் வருவதற்கும்,
ஞாயிற்றுக்கிழமை காலையில் தூக்கம் வராததற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது!
Sasikumar J
திருப்பூரில் இருந்து வர ட்ரெயினை பார்த்தா ஏதோ வடக்க இருந்தது வர மாதிரியே ஒரு பீல் ஆகுது…!

கடைநிலை ஊழியன்
நிறைய பேர் காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி னு சொல்றாங்க..
ஏதோ ஒரு flu ஊருக்குள்ள சுத்துது போல..

மயக்குநன்
தன்னை நம்பிய மக்களை பிரதமர் மோடி கைவிடமாட்டார்!- அண்ணாமலை.
அப்ப… மணிப்பூர் மக்கள் ஜீயை நம்பலையா..?!
ச ப் பா ணி
என்ன பெரிய தேடல்
பஞ்சரான டயருக்கு பஞ்சர் கடையைத் தேடி அலைஞ்சிருக்கியா

Sasikumar J
ஒரு பங்ஷனுக்கு போகும் போது சாதாரணமா போயிட்டு சந்தோஷமா வந்தா பொண்டாட்டி வீட்டு பங்க்ஷன்…!
சோகமா போயிட்டு சண்டையோட வந்தா புருஷன் வீட்டு பங்க்ஷன்…!!
கோழியின் கிறுக்கல்!!
இன்றைய தேதியில் பல டீக்கடைகளில்,
‘வாக்கிங் வடை’ தான் செம ஹிட்!!

லாக் ஆஃப்