இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா… அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்னைக்கு நண்பன் ஒருத்தன் கால் பண்ணி, “மச்சான் ‘குடும்பஸ்தன்’ படம் பார்த்துட்டியான்னு” கேட்டான்.

“இல்லடா, படம் எப்படி இருக்குதுன்னு” கேட்டேன்.

“நம்ம லைஃப்ப தான் மச்சான் டைரக்டரு படமா எடுத்து வச்சிருக்காரு. ஒவ்வொரு மாசமும் அரிசி பருப்பு வாங்குறதுல இருந்து இஎம்ஐ கட்றது வரை நாம படுற கஷ்டத்த தான் மனுஷன் அப்படியே எடுத்து வச்சிருக்கான்னு” சொன்னான்.

“அதெல்லாம் சரி…நம்ம லைஃப நல்லா புரிஞ்சுக்கிட்ட டைரக்டர். அந்த படத்த எப்போ ரிலீஸ் பண்ணணும்னு தெரியலையே. மாசக்கடையில போய் ரிலீஸ் பண்ணியிருக்காரேன்னு” சொன்னேன்.

“ஆமா…இல்லன்னா மட்டும் இவரு தியேட்டருக்கு போய் பார்த்துவாரு. டேய்… டேய் போன மாசம் புஷ்பா படத்துக்கு போவமான்னு கேக்கும்போது கேடிவியில படம் எப்போ போடுவாங்கன்ன்னு கேட்ட ஆளுதானடா நீ… ஒழுங்கா ஓடிப்போயிருன்னு” சொல்லிட்டு போன வச்சிட்டான்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

ச ப் பா ணி
அரசன் அன்று கொல்வார்..
50% டேட்டா முடிஞ்ச Network சுத்தியே கொல்லும்

balebalu
இனிமேல் “இரும்பு பாய்ந்த உடம்பு “
என்று தமிழர்களை சொல்லலாம் போல

கோழியின் கிறுக்கல்!!
தந்தையின் இறப்பு தரும் பாரத்தை விட,
அவர் பொறுப்புகளை தாங்கும் பாரம் அதிகமாகவே இருக்கும்!!

ArulrajArun
இந்த காலத்துல சரக்கு அடிக்கும் போது மிகச்சிறந்த சைடிஸ் அடுத்தவங்களோட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்க்கிறது தான்…

நெல்லை அண்ணாச்சி
” 5000 ” ஆண்டுகள் முன்பே இரும்புத்தொழில்நுட்பம்
அறிந்தவர்கள் தமிழர்கள்.,…
-அது கிடக்கட்டும்….
” அமிர்த நீர் ” தெரியுமா….!!!?

ச ப் பா ணி
சண்டையில் பிறர் திட்டியதை நினைவு வைத்திருந்தால் ஞாபக சக்தி.
நாம் திட்டிப் பேசியதை மட்டும் மறப்பது ஞாபக மறதி

amudu
புல்லட்டின் சத்தம், அதை ஓட்டுபவருக்கு மட்டும் தான் இசை. மற்றவர்களுக்கு அது இரைச்சல் தான்.

படித்ததில் பிடித்தது!
அமெரிக்காவில நம்பாளு ஒருத்தன் பல்வலி தாங்காமல் பல்லை புடுங்கலாம்ன்னு டென்டிஸ்ட் கிட்ட போனான்.

.”டாக்டர் என் பல்லைப் புடுங்கனும்னுன்னா எவ்ளோ ஆகும்”

.”1200 டாலர் ஆகும்”

.அந்த ரேட் அவனுக்கு அதிகமாக தோணிச்சு.

.கொஞ்ச நேரம் யோசனை செஞ்ச பிறகு அவன் அவர்கிட்ட “டாக்டர் என் பல்லை பிடுங்க இதைவிட குறைந்த செலவில் வேறு ஏதாவது வழிகள் இருக்கா?”

.”ஒரே ஒரு வழி இருக்கு. அனஸ்தீஷியா இல்லாம வேணும்னா செய்யலாம். $500 டாலர் குடுத்தா போதும். ஆனா ரொம்ப வலிக்கும்”.

“பரவாயில்ல டாக்டர். அனஸ்தீஷியா இல்லாமலேயே பல்லை பிடுங்குங்க. நான் எப்படியாவது வலியை சமாளிச்சுக்கிறேன்”

.டென்டிஸ்ட் அவனோட பல்லை பிடுங்கிய போது அவன் வலி ஏதும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

.பல்லைப் பிடுங்கி முடிச்சதும் அவருக்கு பணம் கொடுக்க முயன்ற அவனிடம் டென்டிஸ்ட் சொன்னார்: “இந்த அளவு தைரியமும் சகிப்புத் தன்மையுடனும் ஒரு பேஷண்டைக் கூட இதுவரை நான் பார்த்ததே இல்லை. எனக்கு நீ ஒரு கேஸ் ஸ்டடி மாதிரி.. எனவே நீ எனக்கு பீஸ் தர வேண்டாம். இந்த 500 டாலரை எனது அன்பளிப்பாக நீயே வைத்துக் கொள்” என்று தனது பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

.மாலை நேரத்தில் தனது வழக்கப்படி தனது சக பல் மருத்துவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது காலையில் தனது கிளினிக்கில் வந்த பேஷன்ட்டுடன் தனக்கு ஏற்பட்ட ஸ்வாரஸ்யமான அனுபவத்தை மிகுந்த ஆச்சரியத்துடன் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

. எல்லோரும் அவர் சொன்னதை வியந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே ஒரு டாக்டர் மட்டும் எகிறினார்.

.”நீங்கள் சொன்ன பேஷன்ட் காலையில் முதலில் என்னிடம் தான் வந்தான். அவனுக்கு அனஸ்தீஷியா கொடுத்து வெளியில் அமர்ந்து காத்திருக்க சொன்னேன். அரை மணி நேரம் கழித்துப் பார்த்தால் அவன் சீட்டில் இல்லை. ஒரேயடியாகக் காணாமல் போயிருந்தான். அந்த பயபுள்ளை தான் உங்களிடம் வந்திருக்கிறான் போலிருக்கு !” என்று புலம்பித் தீர்த்து விட்டார்.


லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share