சாயந்தர வாக்குல டீ குடிக்க போயிருந்தோம். செல்போனை பாத்துக்கிட்டே… ’ஏண்ணே…வார்த்தைக்கு வார்த்தை மேக் இன் இந்தியா, மேக் இன் இந்தியானு பேசுறாரு நம்ம ஜீ…பட் காமன்வெல்த் சபாநாயகர் மாநாட்டுல இந்திய தேசியக்கொடில ”மேட் இன் சீனா” ன்னு போட்ருக்கே இதான் நம்ம ஜீ யோட மேக் இன் இந்தியாவா?’னு கேட்டாப்ல ஒரு தம்பி.
அதுக்கு ஒரு மொரட்டு முட்டு அண்ணன் சொன்னாரு… ’நீங்க அத அப்டி யோசிக்க கூடாது ஜீ…என்னதான் நம்ம தேசியக்கொடிய சீனாக்காரன் தயாரிச்சு இருந்தாலும் அந்த கொடிய தயாரிக்க சொன்ன நம்ம ஜி ஒரு இந்தியர் தானே? சீனாக்காரனையே நம்ம கொடிய தயாரிக்க சொல்லிட்டமுல்ல’ அப்படினு அள்ளிவிட்டாரு.
மேக் இன் டீ கடைனு மேட்டரை முடிச்சுட்டு நாம வந்துட்ட்டோம். அப்டேட்ட பாருங்க.
நெல்லை அண்ணாச்சி
2023 க்குள் இந்தியாவில்…6G….மோடிஜி
10000 BSNL Towers விற்றது அதற்குதானோ…!!!!
Kirachand
அதிமுகவை பழைய நிலைக்கு கொண்டு வர நானும் பாடுபடுவேன் – பாக்கியராஜ்
முருங்கைக்காய் சூப் போட்டு கொடுப்பாரோ?
புல்லட் பாண்டி
போலீஸ்:
எதுக்குமா உங்க அப்பாவோட கழுத்தை அறுக்க போன ?
அதிதி:
எல்லாரும் எங்கப்பாவ பாத்து சங்கரு சங்கருனு சொன்னாங்க சார் அதான் !
இப்படிக்கு அதிதி ஆர்மி
சேக் பரித்
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார் ஆறுமுகசாமி. -செய்தி
15-வது முறையாகனு தெளிவா சொல்லுங்க.
வசந்த்
நம்ம தேசிய கொடில சீனா காரான் made in China னு போட்டிருக்காங்கேனே.
அத விடு மே நீ.. நம் இந்திய திருநாட்டின் கொடியை நம் எதிரி நாடு வடிவமைக்கிறான்னா என்ன நம்ம நாட்டோட பெருமடா அது கும்டுக்கடா கைத.
Ben memes
நம்ம மைண்ட் வேற சாப்பாட்டுக்கே போகுதே…
மாயவன்
இன்று முதல் பொய்யில் புலவர் என்று அன்புடன் அழைக்கப்படுவார்
மாஸ்டர்
கதைப்படி பார்த்தால் முன்னால் நிற்பவர் தான் மூழ்காமல் உயிர் பிழைப்பார்…
லாக் ஆப்
அண்டார்டிகாவுல ஸ்டாலின் போகாமலே விடியல்: அப்டேட் குமாரு