கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

வானம் மேகமூட்டமுடன் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சொல்லியும், வெயில் உச்சந்தலையில சுர்ருன்னு சுட, சர்ருன்னு பக்கத்துல இருந்த பார்க்குக்குள் நானும், அண்ணனும் நுழைந்தோம். ஆனால் அங்கு இருந்த பட்டமரம் ஒன்றில் இரண்டு இலைகள் மட்டும் காற்றில் ஆடிகொண்டிருந்தது.

அதை பார்த்த எனக்கு கம்பத்தில் பறக்கும் இரண்டு இலைகளின் ஞாபகம் வர, “அம்மா காலத்துல அதிகாரத்தோட இருந்த அதிமுக, இப்போ ரெண்டு அண்ணாத்த கிட்ட மாட்டிக்கிட்டு அல்லாடிக்கிட்டு இருக்கேண்ணே.. ஏன் இப்படி ஆயிடுச்சி?” என்று கேட்டேன்.

இதில் சட்டென வருத்தப்பட்டு, அடுத்த நொடியே பளீரென சிரித்தபடி என் முகம் பார்த்த அண்ணன் ”தம்பி, அத தான் கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாதுன்னு பழமொழி பயில்வான் சொல்லிருகாப்ல. அதனால அதப்பத்தி நாம கவலப்பட வேண்டாம்” என்று சொன்னாரு.

அதுவும் சரிதான் என்று நாங்க காத்து வாங்க போனோம்.. நீங்க அப்டேட் பாருங்க!

update kumar memes trolls

Sasikumar J
ஞாயிற்றுக்கிழமை அதுவும் கிரிக்கெட் மேட்ச் வந்தா வீட்டில ‘மூவி’ வைக்கிறதா இல்ல ‘கிரிக்கெட்’ மேட்ச் வைக்கிறதா என்று இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்யை விட பெரிய போட்டியே வீட்டில நடக்கும்..


update kumar memes trolls

கடைநிலை ஊழியன்
மட்டன் பிரியாணி ல மட்டன் இருக்கும்..
சிக்கன் பிரியாணி ல சிக்கன் இருக்கும்..
பிளைன் பிரியாணி ல பிளைன் இருக்குமா..
அதிதி_இன்ஸ்பிரேஷன்

update kumar memes trolls


தர்மஅடி தர்மலிங்கம்
தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை சிறந்த தேசமாக மாற்றும் – மத்திய அமைச்சர் அமித்ஷா!இன்னும் நீங்க எங்களை பைத்தியக்காரங்களாவே நெனைச்சுட்டு இருக்கிங்கில்ல ஜி.?!

update kumar memes trolls


திருப்பூர் சாரதி
2047ல் அப்துல்கலாம் சொன்னதுபோல இந்தியா வல்லரசாகும். – எல்.முருகன்
அப்துல்கலாம்தான் அன்னைக்குத் தப்பா சொல்லியிருக்கார் முருகேஷா!

update kumar memes trolls

உள்ளூராட்டக்காரன்
மாசக்கடைசில காசில்லாதப்ப தான் கறி திங்கணும்னு தோணும்
வெரிபைட்

update kumar memes trolls

தர்மஅடி தர்மலிங்கம்
குஜராத்தில் அதிகளவில் சிக்கும் போதைப்பொருட்கள்! மோடி மவுனம் காப்பது ஏன்? – ராகுல் காந்தி!
இங்க தரம்யுத்தம் நடந்த மாதிரி அங்க ‘மெளன யுத்தம்’ நடக்கம் போல…

update kumar memes trolls


.

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஏன் வாசப்படில உக்காந்து படிக்கறீங்க..?

நான் entrance exam க்கு படிச்சுட்டு இருக்கேன்யா..
TalkLikeAdhithi

update kumar memes trolls

லாக் ஆப்

புல் புல் பறவைகளே… : அப்டேட் குமாரு

+1
0
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *