உத்தரபிரதேச மாநிலம் டிஏவி பிஜி கல்லூரியில் தண்ணீர் குழாய் திருடனைப் பிடிக்க கழிவறையில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அசம்கரில் டிஏவி பிஜி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள தண்ணீர் குழாய்கள் அடிக்கடி திருடு போவதாக கல்லூரி நிர்வாகம் அசம்நகர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் கல்லூரியில் தண்ணீர் குழாய்கள் உள்ள இடங்களில் சிசிடிவி கேமராவை பொருத்தினர்.

கழிவறையில் உள்ள தண்ணீர் குழாய்களை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமரா பொருத்தியதால் மாணவர்கள் தங்களுடைய தனியுரிமை பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து சிசிடிவி கேமரா அகற்றப்பட்டது.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறும்போது, “கல்லூரி வளாகத்தில் தண்ணீர் குழாய்கள் தொடர்ந்து திருடப்படுகின்றன. பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஆனால் அதில் ஒரு கேமரா தவறுதலாக கழிவறையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை அகற்றி மீண்டும் வேறு இடத்தில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குழாய்கள் திருடப்படுவதை கண்காணிக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.
செல்வம்
வேளாண் பட்ஜெட்: ஆடு மாடு வளர்க்க வட்டியில்லா கடன்!
தென்னை உற்பத்தியை அதிகரிக்க ரூ.20 கோடி!