ஒன்ப்ளஸ் 12ஆர் ஸ்மார்ட் போனை வாங்கிய வாடிக்கையாளர்கள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் ப்ராண்ட்களில் ஒன்ப்ளஸ் எந்த அளவிற்குப் பெயர்போனதோ, அதே போன்று சர்ச்சைக்கும் பெயர் போனது. இதற்கு முன்னர் ஒன்ப்ளஸ் மாடல் ஸ்மார்ட் போன்களை அப்டேட் செய்யும் போது, டிஸ்ப்ளேவில் பச்சை நிறத்தில் கோடு வந்துவிடும்.
அடுத்ததாக அதை சர்வீஸ் செய்தோ அல்லது ரீப்ளேஸ் செய்தோ தான் சரிசெய்ய முடியும். ஒன்ப்ளஸ் நிறுவனமானது அவ்வாறு கோடு வரும் போது இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து, அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அடுத்த சர்ச்சை சமீபத்திய ஒன்ப்ளஸ் 12ஆர் ஸ்மார்ட் போனில்தான் வெடித்துள்ளது, இந்த மாடல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யும் போதும், இணையதளங்களில் விளம்பரம் செய்யும் போதும், ஒன்ப்ளஸ் 12ஆர் மாடலானது UFS 4.0 ஸ்டாண்டர்டு வெர்ஷன் ஸ்டோரேஜ் என்றே கூறப்பட்டது.
ஆனால் அதன் பிறகுதான் உண்மையாக ஒன்ப்ளஸ் 12ஆர் மாடலில் இருப்பது UFS 3.1 ஸ்டாண்டர்டு வெர்ஷன் ஸ்டோரேஜ் என தெரியவந்தது. இது தெரிந்ததும் ஒன்ப்ளஸ் நிறுவனம் அனைத்து தளங்களிலும் விவரத்தை மாற்றியது மட்டுமில்லாமல், நடந்த தவறுக்கு வருத்தமும் தெரிவித்திருந்தது.
வருத்தம் தெரிவித்ததோடு இந்த மாடல் ஸ்மார்ட் போனை வாங்கிய வாடிக்கையாளர்கள் ஏமாந்ததாக உணர்ந்தால், அருகில் இருக்கும் சேவை மையத்திற்குச் சென்று முழுவதுமாக பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என, ஒன்ப்ளஸ் நிறுவனத் தலைவர் கிண்டெர் லியூ கூறியுள்ளார்.
ஒன்ப்ளஸ் 12ஆர் ஸ்மார்ட் போனில் 256 GB வேரியண்டை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். அதன்படி வருகின்ற மார்ச் 16, 2024 வரை மட்டுமே, பணத்தைத் திரும்பப் பெற முடியும் என்று தெரியவந்துள்ளது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL: 2008-2023 வரை…வின்னர், ரன்னர்கள் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு?
கொடநாடு பங்களாவில் ஆய்வு செய்ய உத்தரவு!