update kumaru February 14-2024

அண்ணே மோடி எந்த நாட்டுக்கு பிரதமரு : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

இன்னைக்கு டீ குடிக்கலாம்னு போனப்போ அங்க வேகமா ஓடி வந்த மணிகண்டன் ‘அண்ணே மோடி எந்த நாட்டுக்கு பிரதமருனு மூச்செறைக்க கேட்டான்.

ஏம்பா இப்படி கேக்குறனு கேட்டதுக்கு… ”இல்லணே மணிப்பூர்ல பிரச்சனை நடந்தபோ மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கானு போனாரு… இப்போ அவரு இருக்குற டெல்லில இவ்ளோ விவசாயிங்க போராடிட்டு இருக்காங்க… அபுதாபி போயிருக்காரு… அவரு இந்தியாவுக்கு பிரதமரா? இல்ல இந்த லோகத்துக்கே பிரதமரா?னு கேட்டான்.

தம்பி நீ கேக்குறதுசரி தான்… அவரு அடிக்கடி பேசுற திருக்குறள கூட ‘பல அரசுகளை தங்களோட குடைநிழலின் கீழ கொண்டு வரும் வலிமை உள்ளவங்க விவசாயிகள்’னு சொல்லிருக்கு…

ஆனா வள்ளுவர பத்தி அடிக்கடி பேசுற மோடி… அதுல இருக்குற குறள மறந்துடுவாறு போல… இப்படியே போனா அவரயே மக்கள் மறக்க வேண்டிய சூழ்நில வந்துடும் போல’னு சொல்லி அனுப்பி வச்சேன்.

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

KNR Sivaraj

@கிளாம்பாக்கம்

~ஆறு மணி நேரமா இங்கேயே சுத்துற… வெடிகுண்டு வைக்க பிளான் போடுறயா???

~ஏங்க நாகர்கோவில் பஸ்ஸுக்கு வெயிட் பண்றேங்க

ஆல்தோட்டபூபதி

கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு, முள்வேலி, போதாக்குறைக்கு சாலைல ஆணியை அள்ளி தெளிச்சு உள்ள வரவிடாம ஜி பார்த்துக்கிறார் மாமா..

சீனாவ்யாக மாப்ள?

பக்கத்து மாநில விவசாயிகளை மாமா..

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஏன்னே நாதஸை அடிச்சீங்க..?

பின்ன என்னப்பா? இன்னைக்கு காதலர் தினம்னு சொல்றாங்களே அப்படினா நேத்து முன்னாள் காதலர் தினமான்னு கேட்கறாம்பா..

கடை நிலையன் ஊழியன்!

இந்தியாவை மூன்றாவது பொருளாதார வலிமைமிக்க நாடாக மாற்றுவேன்” – பிரதமர் மோடி

#அது உலகத்துல உள்ள மூணு நாடு தவிர மீதி நாடு எல்லாம் அழிஞ்சப்புறம் தான் நடக்கும்..

நந்தா

மின்சாரத்தை எப்படி சிக்கனமா பயன்படுத்தனும்னு ரெப்ரிஜிரேட்டரை பார்த்து தான் கத்துக்கனும்..

கதவை மூடற ஒவ்வொரு தடவையும் உள்ளே எறிஞ்சுட்டு இருக்க விளக்கை துல்லியமா அதே விநாடி off பண்ணிக்கற அந்த சின்சியாரிட்டி இருக்கே!

update kumaru February 14-2024

Jackie Chan🥋🥋

~ பேபி இந்த valentines டேவ இந்த பிரபஞ்சதுலயே இதுவரை யாரும் கொண்டாடத அளவுக்கு கொண்டிடணும்!!

~ ஏன் நாளையோடு உலகம் அழியப்போகுதா?

~ இல்ல அடுத்த வருஷம் யாரு எங்க இருப்போமோ! அதான்

update kumaru February 14-2024

Sasikumar J update kumaru February 14-2024

காலேஜ் படிக்கும்போது காதலர் தினத்துக்கு எல்லாம் சாக்லேட், ரோஸ் வாங்கிக்கிட்டு எப்படி கெத்தா சுத்திக்கிட்டு இருந்த மனுஷன் இன்னைக்கு என்னன்னா கட்டபையில காய் வாங்கிட்டு போயிட்டு இருக்காரு…!

update kumaru February 14-2024

சரவணன். 𝓜 update kumaru February 14-2024

ஒப்பந்தம் கையெழுத்தான ஒரே மாதத்தில் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்ட தயாரான மின் வாகன உற்பத்தி ஆலை!

மதுரை செங்கல் ~ அய்யோ.. எய்ம்ஸ் என்னாச்சுன்னு இப்ப நம்ம பக்கம் வேற திரும்புவாங்களே?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

’ஓ… இவரு தான் அந்த ரோடு ராஜாவா?’ : வீடியோ வெளியிட்ட சென்னை போலீஸ்!

”போர்க்களத்தைவிடக் கொடூர சூழல்” : விவசாயிகள் போராட்டம் குறித்து ஸ்டாலின் வேதனை!

+1
1
+1
8
+1
0
+1
9
+1
1
+1
0
+1
3