உத்தரபிரதேசத்தில் மதுபோதையில் இரண்டு நபர்கள் நாய்க்குட்டியின் வால் மற்றும் காதை அறுத்து உப்பு சேர்த்து சாப்பிட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தை சேர்த்த இரண்டு நபர்கள் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் அருகில் இருந்த இரண்டு நாய்க்குட்டிகளில் ஒரு நாய்க்குட்டியின் காதையும் மற்றொரு நாய்க்குட்டியின் வாலையும் அரிவாளால் வெட்டி அதை உப்பு சேர்த்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த மனிதநேயமற்ற செயலில் ஈடுபட்ட நபர்களால், நாய்க்குட்டிகளின் காது மற்றும் வாலில் அதிகளவு ரத்தம் வந்துள்ளது. தற்போது இரண்டு நாய்க்குட்டிகளும் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கொடூரமான செயலில் ஈடுபட்டது முகேஷ் வால்மிகி மற்றும் அவரது நண்பர் என காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியந்துள்ளது
பரேலி பகுதியைச் சேர்ந்த தீரஜ் பகத் மற்றும் விலங்குகள் நலனுக்காக செயல்படும் பீப்பிள் ஃபார் அனிமல்ஸ் அமைப்பினர் பரேலி காவல்நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து முகேஷ் வால்மிகி மற்றும் அவரது நண்பர் மீது போலீசார் விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் நாய்க்குட்டியின் வால் மற்றும் காதை அறுத்து சாப்பிட்ட விபரீத சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
ஒரு புரட்சிகர தோழரின் எதிர்பாரா மறைவு!
கோலாகலமாக துவங்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா!