கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்பில் ட்விட்டர் சமூக வலைதள கணக்கை லாக்-இன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் இன்று (மார்ச் 1 ) மாலை 5 மணியிலிருந்து டிவிட்டர் சேவை முடங்கியுள்ளது. இதனால் கடந்த அரை மணி நேரத்திற்கும் மேலாக ட்விட்டர் சேவை கிடைக்காததால் பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இதனால், இன்ஸ்டகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #TwitterDown என்ற ஹேஸ்டேக்கை நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
outage tracker Downdetector தகவலின் படி, டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, பாட்னா, ஐதராபாத், கல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் ட்விட்டர் பயனர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகள் சரிவர செயல்படவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ட்விட்டர் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரையில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஸ்டாலின் பிறந்தநாள்: உலக அளவில் ட்ரெண்டிங்!
ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ லைவ்!