ஆட்குறைப்பு நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் இன்று (நவம்பர் 4) தொடங்கியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல அதிரடியான நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ட்விட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு அறிவிப்பை இன்று அனுப்பியுள்ளது. அதில், “ட்விட்டர் நிறுவனத்தை ஆரோக்கியமான பாதையில் வழிநடத்த, நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளோம்.
எனவே, ஊழியர்களுக்கு இமெயில் மூலம் தகவல்களை அனுப்பியுள்ளோம். அதில் ”நீங்கள் பணியில் தொடர்கிறீர்களா, இல்லையா என்ற விவரம் தெரியவரும்.
இன்று மாலைக்குள் மெயில் வரவில்லை என்றால் நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் நிலைமை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
இந்த மாற்றங்களுக்காக ட்விட்டர் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகிறது. எனவே, அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் வீடு திரும்பவும், அலுவலகத்திற்கு வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் அப்படியே வீட்டிற்கு திரும்பவும் அறிவுறுத்தப்படுகிறது” இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தில் 3,500க்கும் மேற்பட்டவர்களை வேலையை விட்டு நீக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசம் சென்ற உடனே, அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பிராக் அகர்வால் உட்பட முக்கிய அதிகாரிகள் பலரை நிறுவனத்தை விட்டு எலான் மஸ்க் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்