நாள்தோறும் 32 கோடி ரூபாயை இழக்கும்போது ஊழியர்களை பணி நீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் ட்விட்டரை அண்மையில் வாங்கினார்.
பிரபலமான அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் என கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ட்விட்டரை வாங்கிய கையோடு பல அதிரடி மாற்றங்களையும் செய்து வருகிறார் எலான் மஸ்க்.
முதலில் தலைமை நிர்வாக அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளை வேலையில் இருந்து நீக்கினார்.
அத்துடன் ட்விட்டரில் ப்ளூ டிக் பெற மாதம் ரூ. 1600 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு அடுத்தக்கட்டமாக உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் ஊழியர்களை நீக்கியுள்ளார்.
அதன்படி ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேரில் பாதிக்கும் மேற்பட்டவர்களை நேற்று(நவம்பர் 4) ஒரேநாளில் பணிநீக்கம் செய்தார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், ஆட்குறைப்பு துரதிஷ்டமானது. நாள்தோறும் 32 கோடி ரூபாயை இழக்கும்போது வேறு வழி தெரியவில்லை.
பணி நீக்கம் செய்யப்படும் அனைவருக்கும் 3 மாத ஊழியம் வழங்கப்படும், அது சட்டப்பூர்வமான அனுமதி அளவை விட 50 சதவிகிதம் அதிகம் என்று தெரிவித்துள்ளார்.
ஏராளமான விளம்பரதாரர்கள் ட்விட்டரில் விளம்பரம் கொடுப்பதை நிறுத்தி விட்டார்கள். இதனால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
கலை.ரா
வம்சியிடம் இதயத்தை வாங்கிய திருமூர்த்தி!
தொடரும் கனமழை: 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!