முட்டாள்தனமான நபர்கள் கிடைத்தால் ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளாகிவருகிறார்.
ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக எலான் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் மாற்றங்கள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முக்கிய விவகாரங்களில் ட்விட்டரில் கருத்துக்கணிப்பு நடத்தி, அந்த முடிவுகளின் அடிப்படையில் முடிவு எடுத்து வருகிறார் மஸ்க்.
அதன்படி, ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர்த்து கொள்ளப்படலாமா என கருத்துக்கணிப்பு நடத்தி, அந்த முடிவுகள் அடிப்படையில் அவரின் கணக்கின் மீது விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டது.
ட்விட்டரில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் நிலையில், நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ட்விட்டரில் மஸ்க் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி , “ட்விட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? கருத்துக்கணிப்பு முடிவுகளை பின்பற்றுவேன்” என பதிவிட்டிருந்தார்.
அதில், பதவி விலக வேண்டும் என 57.5 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர். பதவி விலகக் கூடாது என 42 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர்.
இந்நிலையில், பயனர்களின் வாக்குப்பதிவை அடுத்து, இன்று (டிசம்பர் 21 ) எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் , “ட்விட்டர் பொறுப்புகளை ஏற்க கூடிய முட்டாள்தனமான நபர் கிடைத்தால் சிஇஒ பதவியிலிருந்து விலகுவேன், புதிய சிஇஓ வந்ததும் சாப்ட்வேர், சர்வர்ஸ் டீம்களை நான் கவனிப்பேன் ” என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
தனுஷ் முதல் நயன்தாரா வரை! 2022 ஆம் ஆண்டு சர்ச்சையில் சிக்கிய பிரபலங்கள்
வேலைவாய்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் பணி!