உலகம் முழுவதும் ட்விட்டர் பக்கம் செயல்படாமல் முடங்கியதால் அதன் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர்.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார். தற்போது ட்விட்டர் வலைதளத்தில் அவர் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார்.
குறிப்பாக அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இதனால் நாளுக்கு நாள் ட்விட்டர் குறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இன்று (டிசம்பர் 29) காலை கணினி (PC ) உள்ளிட்ட சாதனங்களில் ட்விட்டரை பயன்படுத்த முடியவில்லை. இதனால் அதன் பயனாளர்கள் குழப்பத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #TwitterDown ஹேஸ்டேக்கில் புகார் அளித்தனர்.
சிறிது நேரத்துக்கு பின் ட்விட்டர் வழக்கம்போல் செயல்பட்டது. இருப்பினும் ட்விட்டர் பக்கம் செயல்படாமல் இருந்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றிய எந்த தகவலும் தற்போது வரை பகிரப்படவில்லை.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பணி!
வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும்? -மனம் திறந்த ராகுல் காந்தி