ட்விட்டரில் புளூ டிக் பெற இனி மாதம் ரூ. 1600 கட்டணம் வசூலிக்க எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.
ட்விட்டரை வாங்கியுள்ள எலான் மஸ்க் அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
ட்விட்டரை வாங்கிய கையோடு அவர் அதன் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால், தலைமை நிர்வாக அதிகாரி நெட் செகல் மற்றும் கொள்கை தலைவர் விஜய கடா போன்ற முக்கிய நபர்களை பணிநீக்கம் செய்தார்.
அத்தோடு ட்விட்டரில் போலி கணக்குகளை அகற்றுவதற்கான மாற்றங்களையும் செய்து வருகிறார்.
மேலும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குதான் என்பதை குறிக்கும் புளூ டிக்கைப் பெற கட்டணத்தை மும்மடங்காக உயர்த்தவும் எலான் மஸ்க் திட்டமிட்டிருக்கிறார்.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் ட்விட்டரை பயன்படுத்துகின்றனர்.
இது அவர்களின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தான் என்பதை உறுதிப்படுத்த பெயருக்கு அருகில் புளூ டிக் இருக்கும். இதற்காக மாதம் (4.99) அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.410 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால் தற்போது எலான் மஸ்க் அந்த கட்டணத்தை 20 அமெரிக்க டாலர்களாக உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி புளூ டிக் பயனாளர்கள் இனி மாதம் ரூ. 1600 செலுத்தவேண்டியிருக்கும்.
இந்த அறிவிப்பு வெளியான 90 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்தாவிட்டால் புளூ டிக் அகற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
டிவிட்டரை மறுசீரமைக்க பொறியாளர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 7 ஆம் தேதிக்குள் அவர்கள் பணிகளை முடிக்கவேண்டும் என்றும் இல்லை என்றால் வேலை இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
கலை.ரா
குஜராத் பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 140ஐ தாண்டியது!
காலணிகளை பாதுகாக்க காவலர்கள் பணியமர்த்தப்பட்டனரா? மாவட்ட நிர்வாகம் பதில்!