சூடான் நாட்டில் உள்ள இந்திய மற்றும் சீன ராணுவத்தின் அமைதிப்படையினர் இடையே நடைபெற்ற கயிறிழுக்கும் போட்டியில் இந்திய படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.
2005ஆம் ஆண்டு சூடான் அரசிற்கும், சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான விரிவான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதின் அடிப்படையில், சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் தூதரகம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த பாதுகாப்பு பணியில், ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கும் உறுப்பு நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை ஈடுபடுத்தி வருகின்றன. இந்நிலையில், சூடான் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இடையே அவ்வப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
அதன்படி, இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இரு தரப்பினரும் வலிமையாக கயிறை இழுத்தனர். கயிறு இழுத்தல் போட்டியில் பங்கேற்ற வீரர்களை மற்ற வீரர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
ஆனால், போட்டியின் முடிவில் இந்திய ராணுவத்தினர் வெற்றி பெற்றனர். இந்த போட்டியின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு நட்பு ரீதியிலான மற்றும் உற்சாகமான போட்டி என்று ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மனுதர்ம மாணவர்களாக மாற்ற முயற்சி: ஆளுநரை சாடும் டி.கே.எஸ்.இளங்கோவன்
All Eyes On Rafah: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரண்ட பிரபலங்கள்!