நேத்து சாயந்தரம் ஏழுமணிக்கு டீ கடையில பேசிக்கிட்டிருந்தப்ப நம்ம ஃபிரண்ட் யாருக்கோ போன் பண்ணாப்ல… ‘ஏப்பா… நம்ம ராக்கெட் நிலாக்கு போயி இறங்கிடுச்சாமே… வா பீர் சாப்ட்டு கொண்டாடுவோம்’னு கூப்பிட்டாப்ல. அப்படியே போயிட்டாங்க..
இன்னிக்கு சாயந்தரம் அதே ஃபிரண்டு அதே டீகடையில இருந்து போன் போட்டாப்ல, ’நேத்து சந்திராயன் வெற்றிக்கு பீர் சாப்ட்டோமே…இன்னிக்கு நம்ம பிரக்ஞானந்தா செஸ்ல ஜஸ்ட் மிஸ்ல தோத்துட்டார்பா சோகமா இருக்கு போவோமா?’னு கேட்டாப்ல. என்னய்யா நடக்குதுனு அவர்கிட்ட கேட்டேன்… ’நேத்து சந்திராயன் வெற்றினு சொல்லி கூப்பிட்டேன். செலவை என் தலையில கட்டிட்டான். அந்த கணக்கை இன்னிக்கு சதுரங்கத்துல தீத்துட வேண்டியதுதான்’னு சொல்லிட்டுப் போறாப்ல.
சந்திராயனோ, சதுரங்கமோ இவங்களுக்கு எல்லாமே சரக்குதான்…
நீங்க அப்டேட் படிங்க
குருநாதா
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
God~
அப்ப எனக்கு என்ன மரியாதைங்குறேன்!?!?
ஜோ…
2.5 லட்சம் கி.மீ டிராவல் பண்ண சந்திராயன் 3 க்கு பட்ஜெட் ரூ 615 கோடி.
ஆனா, உள்ளூர்ல துவாரகா விரைவுப்பாதை திட்டத்துல 1 கி.மீ க்கு ரூ 250 கோடி ஒதுக்கிருக்கீங்க..
இப்பிடி ஊழல் பண்றது நியாயமா ஜீ??!
ஷேக்பரித்
தமிழ் நாட்டுக்காரனுக ஒரு வாழ்த்து கூட சொல்ல.
1962 னு பழச தோண்டி எடுத்து நேரு க்கு வாழ்த்து சொல்லிட்டு இருக்காங்கே..
கடைநிலை ஊழியன்…
ஏன்ணே அவன அடிக்குறீங்க..
பின்ன.. நிலா ல பாட்டி வட சுடுவாங்களே.. அவுங்க போட்டோ’வ சந்திரயான் எப்ப எடுத்து அனுப்பும் னு கேக்குறான்…
ℳsd ❝இதயவன்❞
உக்ரைன் போருக்கு மேலை நாடுகளே காரணம் ~ ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்
ஜி க்கே டப் கொடுப்பார் போல?!
நெல்லை அண்ணாச்சி
274 பேர் இருந்தும் அனாதைகள் ஆனோம்..
( 234 + 40 )… NEET..
சாணக்கியன்♥♥I.N.D.I.A
சந்திராயன் நிலவில் இறங்கும்போது 7 மில்லியன் பார்வையாளர்கள்.
ஜி பேச ஆரம்பிச்சதும்.,.5 மில்லியன் பார்வையாளர்கள்.
நாம சொல்லல..,டேட்டா சொல்லுது…
balebalu
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் விரைவில் அனுப்பப்படும் – பிரதமர்
காஸ் சிலிண்டர் விக்கிற விலைக்கு இனிமே சூரியனுக்கு போய்த்தான் சமைக்க முடியும் போல
குருநாதா
இன்னையில இருந்து மூஞ்சி கழுவீறாதடீ..
ஏண்டா?
சந்திரயான் மேல தண்ணி படக்கூடாதாம்…
ஜோ…
நிலாவுக்கு சந்திராயன் 3 அனுப்புனது யாரு?
~ ஹனுமான்ஜி .
கொய்யால, தமிழன்.. “வீரமுத்துவேல்” ங்குற தமிழன்.
கோழியின் கிறுக்கல்!!
ஜி, பார்த்து பேசுங்க, வழக்கம் போல இதுக்கும் நேரு தான் காரணம்”னு சொல்லிட போறீங்க!!
லாப் ஆஃப்
பிரக்ஞானந்தாவிற்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து!