உலகக் கோப்பைய வாங்கி அதுமேல காலைத் தூக்கிப் போட்டிருக்காங்க பாரு… மரியாதை தெரியாத இடத்துல கப்பைக் கொடுத்துட்டு ஒரே பேஜாரா போச்சுப்பா- இப்படி இன்னிக்கு சாய்ந்தரம் வரைக்கும் டீ கடையில ஒரே புலம்பல்.
இப்படி சொன்ன நம்ம நண்பனை மாஸ்டர் திரும்பிப் பாத்தாரு… ‘ஏன்யா… மரியாதை தெரியாத இடத்துல ஏதோ பொண்ணைக் கொடுத்துட்டா மாதிரி ஏன் புலம்பிக்கிட்டிருக்கே? அவன் விக்கெட் எடுத்தான், ரன் எடுத்தான்., இப்ப கப்பை வாங்கி காலைத் தூக்கி மேல போடுறான். அவன் கப்பு… என்ன வேணும்னாலும் பண்ணுவான். உனக்கென்ன?
நீ டீய குடிச்சுட்டு ஒழுங்கா கிளாஸை வச்சிட்டு போ’னு கத்தினாரு.
எதுக்கு வம்புனு டீ கிளாசை வச்சிட்டு பேசாம போயிட்டானுங்க. இன்னும் எத்தனை நாளைக்கு உலகக் கோப்பை உதார் விடுவானுங்களோ…
நீங்க அப்டேட் பாருங்க….
ஆச ஆசயா தன் பேர்ல கிரவுண்ட்ட கட்டி,
ராசா மாதிரி வந்து கெத்தா உக்கரணும்னு
நெனச்ச மனுசண்டா இப்படியாடா பண்ணுவீங்க…
#வேர்ல்டு கப் பைனல்
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் தாங்கள் வாங்கிய ஒலிம்பிக் மெடலை ஹரித்துவார் நதியில் வீச போன போது வலிக்காத மனசு,
ஆஸ்திரேலியாக்காரன் கோப்பை மேல கால் வச்சதுக்கு வலிக்குன்னா… யார் சார் இவனுங்க?
LS
என்ன ட்ராவிஸ் ஹெட் வயசு 30 ஆக போகுதாமே?
இதே மஞ்ச கலர் ட்ரெஸ் போட்ட ஒரு ஐபிஎல் டீம் இருக்கு.. வர்றியா??
ஆஸ்திரேலியா காரன் காலுக்கு கீழ கப் வச்சதுக்கு கோவப்படுறானுங்க,
ஆனா இங்க சகமனுஷன் மேல ஒண்ணுக்கு அடிக்குறதும்,
தீட்டு பார்த்து ஒதுக்கியும் வைக்குறாங்க.. என்னா மனுஷனுங்க…
ச ப் பா ணி
‘கை’ மாத்தா கொடுத்த கடனை
‘கால்’ நடையா போய் தான் கேட்டு வாங்கனும்
மூன்று ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? ~ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்
வேலையே இல்லாதவர்தான் ஆளுநர்னு நினைத்துக்கொண்டிருந்தேன் யுவர் ஆனர்! ~ ஆர்.என்.ரவி
he ~ ஃபைனல் எந்த மாசம் நடந்துச்சி
me ~ நவம்பரு
he ~ நேரு எந்த மாசம் பிறந்தாரு
me ~அதுவும் நவம்பரு
he – அப்போ தோல்விக்கு காரணம் நேரு தான்
me ~ நீ திருந்தவே மாட்டியா??
தட் ஜி ~ அடப்பாவிகளா… ராமர் காலுல வைக்க வேண்டிய Cup மேல காலப்போட்டு
அநியாயமா எங்க ஓட்டுல மண்ணள்ளி போட்டுட்டீங்களேடா..!
Friend ~ இந்தியா எல்லா மேட்ச் வின் பண்ணி final தோத்தது ரொம்ப கஷ்டமா இருக்குடா
Me ~ அவனவன் பொழப்பே தோத்து போயி குப்புற கிடக்குது அதுக்கே கவல படாம போயிட்டு இருக்கோம் போவியா…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
”ஆனந்த்ராஜ் சாருக்கு தான் சிறந்த நடிகைக்கான விருது”: 80ஸ் பில்டப் விழாவில் ருசிகரம்!
BiggBoss: அந்த மூன்று பேரும் ரீ-எண்ட்ரி… அவங்க வேணாம்… அலறும் போட்டியாளர்கள்!