வழக்கம்போல நானும், நண்பன் அண்ணாமலையும் டீ குடிச்சிட்டு இருந்தோம். திடீர்னு அவன், “அசோக்… இந்த நாள உன் டைரில குறிச்சிக்கோ… வர பிப்ரவரில இருந்து நான் சரக்கடிக்க மாட்டேன். இது இந்த டீ மேல சத்தியம்’னு சொன்னான்.
’டேய் எல்லோரும் ஜனவரில தான சபதம் எடுப்பாங்க… நீ என்னடா பிப்ரவரில எடுக்குற?’னு கேட்டேன்.
அதுக்கு அவன், “நீ இன்னும் பேப்பர பாக்கல போல… எல்லா சரக்கு விலையும் பிப்ரவரில இருந்து உயர்த்துராங்கலாம். எனக்கு வேற வழி தெரில.. அதனால தாண்டா இந்த சபதம்”னு சொல்லிட்டு சோகமா பாத்தான்.
என்னதான் அவன் சோகமா பாத்தாலும்… மணி 7 ஆச்சுனா டான்னு டாஸ்மாக்குல நிக்குற அண்ணாமலையோட பிப்ரவரி சத்தியத்த நெனச்சா சிரிப்பு தான் வந்துச்சி…
நீங்க அப்டேட் பாருங்க!
ச ப் பா ணி
அதிகமாக கட்சி மாறியவர்கள் பலர் இருக்கலாம்..ஆனால் அதிகமாய் ஆட்சி மாற்றியது நிதிஷ்குமார் தான்
balebalu
நாங்கள் எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம் – அண்ணாமலை
ரெஸ்ட் எடுத்து , ரெஸ்ட் எடுத்து போகிற பாதை தானே
தர்மஅடி தர்மலிங்கம்
நாங்கள் ED-க்கும் பயப்பட மாட்டோம்; மோடிக்கும் பயப்பட மாட்டோம்” அமைச்சர் உதயநிதி!
அதான.. டாடி இருக்க பயமேன்..?
Kirachand
பாஜகவுக்கு அட்ரஸ் தந்தவர் ஜெயலலிதா! -கே.பி.முனுசாமி
பழனிசாமி,பாஜகவை அட்ரஸ் இல்லாமல் நடுத்தெருவில் நிக்க வைக்கப் போகிறாரோ?
வசந்த்
முன்னாடி லாம் வாழ்கை கடகடனு போகும் இப்பல்லாம் கடன் கடன்னு போகுது.
நெல்லை அண்ணாச்சி
CSK அணியில் அனைவரும் தமிழர்கள்.,..
” நானும் ” ஆடுவேன்,.!!
..சீமான் சபதம்… ¡!!
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
“சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை” – நடிகர் ரஜினிகாந்த்
வா அருணாச்சலம் நீ வருவேன்னு எனக்கு நல்லா தெரியும்
தர்மஅடி தர்மலிங்கம்
நேதாஜி இல்லையெனில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது! -ஆளுநர் ஆர்.என்.ரவி!
நல்லவேளை… இதுல மோடி ஜிய சொல்லாம விட்டுட்டாரு.?!
Mannar & company
உறவினர்களுக்கு “கடைசியாக” என்ன உதவி செய்தோம் என்பதை வைத்தே நமக்கு ‘முதல்’ மரியாதை கொடுக்கிறார்கள்!
ℳsd இதயவன்
எடப்பாடியின் அரசியல் உட்கார்ந்து விட்டது. அண்ணன் ஓபிஎஸ்யின் அரசியல் புறப்பட்டு விட்டது~
மருது அழகுராஜ் OPS ஆதரவாளர்
இரண்டுமே ஜாம் ஆகிதான் நிக்கிது?!
balebalu
எதுக்குடா சிரிக்குற ?
தமிழ்நாட்டு கிராமங்களின் நிலையை பார்த்தே இவ்வளவு அதிர்ச்சி ஆகுறாரே
இன்னும் பீகார் , உ பி கிராமங்கள் எல்லாம் பார்த்தா
என்ன ஆவாரோ ன்னு
நினைச்சேன் சிரிச்சேன்
ச ப் பா ணி
விஷேச நாட்களில் அதிக கட்டணம் வசூலிப்பது
ஆம்னி டிக்கெட்டும்,
அர்ச்சனை டிக்கெட்டும் தான்.
மயக்குநன்
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களே இருக்காது!- முதல்வர் ஸ்டாலின்.
அதுக்கு முன்னால… ‘இண்டியா’வே இருக்காது போலிருக்கே..?!
கோழியின் கிறுக்கல்!
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் சீட் கொடுக்கணும்னு நினைக்கிறதே,
ராகுல் காந்தியை ரொம்ப பிடிச்சதாலேயும், மோடியை ரொம்ப பிடிக்காததாலேயும் தான்!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
கோயம்பேட்டில் லுலு மால்… வதந்தியா? உண்மையா? : அரசு விளக்கம்!
ஷூட்டிங்கை கேன்சல் செய்து வெளியேறிய விசித்ரா… தினேஷ் தான் காரணமா?