இன்னைக்கு ஆபிஸ் முடிஞ்சி வீட்டுக்கு வரும்போது, வீட்டம்மா போன் பண்ணி ‘ஏங்க வரும்போது மறக்காம மாவு வாங்கிட்டு வந்துருங்க’னு சொன்னாங்க..
பழக்கதோசத்துல வாங்காம மறந்து வீட்டுக்கு போயிட்டேன். ’என்னங்க மாவு வாங்கிட்டு வந்துட்டீங்களானு கேட்க, மறந்து வந்தத காட்டிக்காம, கெத்தா ‘அத விடுமா போயி சப்பாத்தி சுடு’னு தான் சொன்னேன்.
எவ்ளோ நாள் பகைனு தெர்ல, சப்பாத்தி கட்டைய எடுத்து மண்ட மேலயே எறிஞ்சுட்டு, மாவு உருட்டுங்கனு சொல்லிட்டு வீட்டம்மா விருட்டுனு சீரியல் பாக்க போயிருச்சி.
ஒன்னும் மட்டும் தெரிது… கெத்தல்லாம் வீட்டுக்கு வெளியதான் போல…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
balebalu
Side Effect இல்லாத ஒரே மருந்து –
கார்ப்பரேஷன் கொசு மருந்து

vijaychakkaravarthy
~“காலைல நல்லா சாப்டாதான்டா, தெம்பா வேலைக்கு போக முடியும்….”
Me After eating வடை with வெண்பொங்கல் & இட்லி
“ஒரு இரெண்டுமணி நேரம் மறுபடியும் தூங்கிட்டு வேலைக்கு போறேன்…”
நெல்லை அண்ணாச்சி
BJP யிடம் பிடித்ததே….” top to bottom ” அனைவரும்
ஒரே மாதிரி …# for example ….கோமியம்…

ச ப் பா ணி
உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ -அதிபர் ட்ரம்ப்
-இனி எனக்கும் WHO க்கும் எந்த சம்பந்தமும் இல்ல
செங்காந்தள்
மாட்டின் கோமியம் 80 வகையான காய்ச்சலை குணப்படுத்தும் என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி துவங்காததன் காரணம் இப்போது தான் புரிந்தது.

மயக்குநன்
‘ரவி மோகன்’ என தனது பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் ஜெயம் ரவி!
ஷங்கர் தந்தது கேம் சேஞ்சர்… ரவி தந்ததோ ‘நேம்’ சேஞ்சர்..!
ச ப் பா ணி
இருப்பதை வைத்து சந்தோசப் படமுடியவில்லை
“கடன்”!

லாக் ஆஃப்