இன்னைக்கு டீக்கடைக்கு போயிருந்தேன். அங்க டீ ஆத்திட்டு இருந்த உ.பி. காரரா காணோம்.
என்னாச்சினு ஓனர் கேட்டா, ”இல்ல நேத்து நைட்டு திடீர்னு ‘இனி நான் இந்தில மட்டும் தான் பேசுவேன்’னு சொன்னான். அவன் பேசுற தமிழுக்கு, இந்திலயே பேசிட்டு போகட்டும்னு சொல்லிட்டேன்.
அடுத்து, என்கிட்டயும் எல்லாரும் இந்தில பேசனும்.. அப்பதான் வேல செய்வேன்’னு சொன்னான் பாரு.. கோபமாயிட்டு… போ உங்க ஊருலய போய் இந்தில பேசிக்க”னு சொல்லி வேலய விட்டு தூக்கிட்டேன்.
ஆகா, உ.பி.காரர் பேசுனது கேட்டா, அப்படியே இன்னைக்கு அந்த மத்திய கல்வி அமைச்சர் பேசுனது தான் ஞாபகம் வந்துடுச்சி.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

சப்பாணி
மகன் முடிவெட்ட செல்லும் சலூன் கடைக்கு..
அப்பா டை அடிக்கச் செல்கிறார்
-தலைமுறை இடைவெளி

balebalu
திருப்பரங்குன்றத்தில் பவன் கல்யாண் – செய்தி
மகாபிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா

நெல்லை அண்ணாச்சி
அடேய்….காளியங்கா.. அது …”House arrest” டா..!!
-விஜய்க்கு ” Y ” பிரிவு பாதுகாப்பு..!!

சப்பாணி
வீட்டுக்கு பூ வாங்கிப் போவதற்கும்
வீட்டில் பூரிக்கட்டையால் வாங்குவதற்கும் இடைப்பட்ட காலமே காதல் வாழ்க்கை…
Sasikumar J
~ வைஃப்க்கு ஒரு அட்வைஸ் பண்ணி பாரு…!
~ ஏன் அதை கேட்டுபாங்களா…!
~ அதான் இல்ல…!
~ நமக்கு 100 அட்வைஸ் பண்ணுவாங்க…!

மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩
பனையூர் பங்களால பத்திரமா தானே இருக்கேன்..
எனக்கு எதுக்கு Y பிரிவு பாதுகாப்பு?
படிக்காதவன்
அதிகாரம் அரசியல்வாதிகளிடம் பயந்தும்
ஏழைகளிடம் ஏமாற்றியும் வாழும்…

கோழியின் கிறுக்கல்
பழைய வண்டியை ஓட்டிட்டு இருக்கிறவங்க பெரும்பாலனவர்கள்,
புது வண்டி வாங்க காசு இல்லாம இல்ல, பழைய வண்டியை பிரிய மனமில்லாமல் தான் அதை ஓட்டிட்டு திரியுறாங்க!!

லாக் ஆஃப்