டீன் ஏஜ் பருவத்தில், கண்ணாடியின் முன் நின்று ‘அழகாக இருக்கிறோமா…’ என்று அடிக்கடி முகம் பார்ப்பது சகஜம். முகத்தில் சிறு புள்ளி தெரிந்தாலும், சிணுங்கத் தொடங்கிவிடுவார்கள் நம் வீட்டு இளசுகள். அவற்றைத் தடுக்க சித்த மருத்துவர்கள் சொல்லும் சில வழிமுறைகள் இதோ…
நம் பாரம்பரிய வழக்கப்படி, தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுதான் இதற்கு சிறப்பான தீர்வு. நல்லெண்ணெயை உச்சந்தலை, தொப்புள் மற்றும் கால் பெருவிரல் இரண்டிலும் நன்றாகத் தேய்த்து மசாஜ் செய்த பின் குளிக்க வேண்டும். அதிக சூடு உள்ளவர்கள் சந்தனாதி தைலம் மற்றும் வில்வப்பழத் தைல எண்ணெய்களைப் பயன்படுத்திக் குளிக்கலாம்.
நீராகாரம், இளநீர், மோர், பழச்சாறு போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும். எலுமிச்சை, இஞ்சி, தேன் சேர்த்த சாறுடன் பருக வேண்டும்.
சின்ன வெங்காயத்தை மோருடன் கலந்து தினமும் மதியம் பருகலாம்.
நிறையப் பிஞ்சு வெள்ளரியை அடிக்கடி சாப்பிடுங்கள்.
நுங்கு நீரை பருக்கள் இருக்கும் இடத்தில் தடவிவர வேண்டும்.
சங்கை எலுமிச்சைச் சாறில் இழைத்து பரு உள்ள இடங்களில் பூச வேண்டும். சங்கு கிடைக்காவிட்டால் சங்குபஸ்பம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும், அதையும் பயன்படுத்தலாம்.
சந்தனத்தை நன்றாக இழைத்துப் பூசிவர, பரு காய்ந்துபோகும்.
குப்பைமேனிக் கீரையுடன் பூசு மஞ்சளை அரைத்து முகத்தில் தேய்க்க, பரு மறைந்துவிடும்.
சந்தனம், வெட்டிவேர், விலாமிச்சை வேர், கோரைக்கிழங்கு, பாசிப்பருப்பு போன்றவற்றால் தயாரிக்கப்படும் நலுங்கு மாவால் முகம் கழுவினால், பருவின் வீரியம் கட்டுப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்… எந்த நேரத்துக்கு எப்படிப்பட்ட உணவு?
மன்னராட்சியா? மக்களாட்சியா? : அப்டேட் குமாரு
தீபத் திருவிழா : திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை!
விழுப்புரம் : வெள்ளம் வடிந்தும், வடியாத சாதி பூசல்!
கணவரை காப்பாற்ற கல்லீரல் கொடுத்தவர்; ‘புஷ்பா’ பலி வாங்கிய பெண் பற்றி உருக்கமான தகவல்!