இன்றைய தலைமுறையினருக்கு வெகு சீக்கிரத்தில் தலைமுடி நரைத்து விடுகிறது. அதற்குக் காரணம், பெற்றோரில் இருவரில் ஒருவருக்கு இள வயதிலேயே நரை வந்திருந்தால், அவர்களின் பிள்ளைகளுக்கும் மரபு வழியே அது தொடரக்கூடும். அடுத்து கூந்தலுக்குப் போதுமான ஊட்டம் கிடைக்காத பட்சத்தில் சீக்கிரமே முடி நரைக்கும்.
இந்த நிலையில் முடி செம்பட்டையாகத் தொடங்கும்போதே அலர்ட் ஆகி, கவனம் செலுத்த ஆரம்பியுங்கள். உணவில் இரும்புச்சத்து, துத்தநாகச் சத்து, புரச்சத்து என எல்லாமே இருக்க வேண்டும்.
இவையெல்லாம் காஸ்ட்லியான உணவுகளில்தான் கிடைக்கும் எனத் தேடி ஓட வேண்டாம். நம்முடைய அன்றாட உணவுப் பழக்கத்திலேயே கிடைக்கக்கூடியவைதான். குறிப்பாக, காலை உணவைத் தவிர்க்கவே கூடாது.
ஃபேஷன் என்ற பெயரில் கூந்தலை அடிக்கடி அயர்ன் செய்வது, ஸ்ட்ரெயிட்டனிங் செய்வது, கலரிங் செய்வது போன்ற சிகிச்சைகளும் இளநரையை ஏற்படுத்தலாம்.
ஃபேஷன் கலர்கள் செய்துகொள்ளும்போது, சில கலர்களுக்கு கூந்தலின் இயற்கையான கருமை நிறத்தை நீக்கிவிட்டுதான் விருப்பமான வேறு கலரை அப்ளை செய்ய முடியும். அதனாலும் கூந்தலின் கருமை மாறி, நரைக்கத் தொடங்கும்.
எனவே, இது போன்ற சிகிச்சைகளைத் தவிர்க்க வேண்டும். இந்த நிலையில், இளநரை மேலும் அதிகரிக்காமல் இருக்க இந்த பாட்டி வைத்தியம் உதவும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
“கடுகெண்ணெயில் உள்ள சல்ஃபர் சத்து, கூந்தல் உடையாமல் காக்கும். கடுகெண்ணெயின் வாடை பிடிக்காதவர்கள், அத்துடன் சம அளவு விளக்கெண்ணெய் கலந்து எடுத்துக்கொள்ளவும்.
இதை முதல் நாள் இரவு தலையில் தடவி, ஒரு மணி நேரம் ஊறி, ஷாம்பூ குளியல் எடுக்கவும்.
மறுநாள், கால் மூடி தேங்காயைத் துருவி, தண்ணீர் விடாமல் அரைத்து 2 டேபிள்ஸ்பூன் அளவுக்கு கெட்டியான பால் எடுத்துக்கொள்ளவும்.
அதில் ஈவ்னிங் ப்ரிம்ரோஸ் ஆயில் (Evening Primrose Oil) கேப்ஸ்யூலில் (எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்) உள்ள எண்ணெயை விட்டு, காட்டன் உருண்டையை முக்கி, மண்டைப்பகுதியில் படும்படி தலை முழுவதும் தடவி, 2 – 3 மணி நேரம் ஊறவும்.
பிறகு, ஷாம்பூ குளியல் எடுக்கவும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வந்தால், நரை தடுக்கப்படும். வந்த நரையை மாற்ற முடியாது என்றாலும், மேற்கொண்டு நரைப்பதைத் தவிர்க்கலாம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷாக் அடிக்குது மக்களே : அப்டேட் குமாரு
அமலுக்கு வந்தது மின் கட்டண உயர்வு : யூனிட்டுக்கு எவ்வளவு தெரியுமா?
தொழிலதிபரின் விருப்பப்படி நடந்த துப்பாக்கிச்சூடு : சிபிஐ-க்கு நீதிமன்றம் கண்டனம்!
குழந்தைக்கு பெயர்சூட்டிய அண்ணாமலை… ஷாக் ஆன பாஜகவினர்!