அனைத்து தரப்பினருக்கும் ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்ட ஒரு வாகனம் என இருசக்கர வாகனங்களை கூறலாம். குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்களின் மத்தியில் இருசக்கர வாகனங்களுக்கு என மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
இதனால் இருசக்கர வாகன பிரியர்களின் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றாற்போல பல்வேறு வசதிகளுடனும், புதுப்புது தொழில்நுட்பங்களுடனும் இந்திய சந்தைகளுக்கு இருசக்கர வாகனங்கள் வந்தவண்ணம் உள்ளன.
இருசக்கர சந்தையை பொறுத்தமட்டில் கேடிஎம், கவாஸாகி, ஹீரோ, யமஹா, டிவிஎஸ், ஹோண்டா, சுஸுகி என விதவிதமான வாகனங்கள் இருக்கின்றன. என்றாலும் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் வாகனங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதை நிரூபிப்பது போல பஜாஜ் நிறுவனம் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1,70,527 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,20,338 வாகனங்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதனை வைத்துப் பார்க்கும்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில், பஜாஜ் நிறுவனத்தின் வளர்ச்சி சுமார் 42% அதிகரித்துள்ளது.
-இரசிக பிரியா மாணவ நிருபர்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடி தொகுதி என்ன ஆனது? அதிரடியில் இறங்கிய அதிமுக
தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரம் : ஸ்டாலினை சாடிய எடப்பாடி