இளைஞர்கள் மட்டுமின்றி தம்பதியினரும் விரும்பும் வாகனமாக பைக்குகள் இருக்கின்றன. காரை விட கையாள்வது எளிது என்பதாலும், குடும்ப பட்ஜெட்டிற்கு ஏற்ற வாகனமாக இருப்பதாலும் இந்திய இளைஞர்களின் முதல் சாய்ஸ் ஆக பைக்குகளே இருக்கின்றன.
இந்திய சந்தையில் பைக்கிற்கான தேவையும் அதிகமாக இருப்பதால் யமஹா, ஹீரோ, ஹீரோ ஸ்பிளெண்டெர் பிளஸ், டிவிஎஸ், பஜாஜ் போன்ற முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு, பைக் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
அதோடு சீரான இடைவெளியில் அவ்வப்போது புதிய பைக்குகளையும் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் விலை, மைலேஜ், பிராண்ட் அடிப்படையில் இந்திய இளைஞர்களிடம் அதிக பாப்புலராக இருக்கும் ‘டாப் 10 பைக்குகள்’ குறித்து இங்கு காணலாம்.
இந்த பட்டியலில் யமஹா MT15 ரூபாய் 1.69 லட்சத்துடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டெர் பிளஸ் ரூபாய் 75, 291 உடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரூபாய் 1.95 லட்சத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. யமஹா R15 V4 ரூபாய் 1,85 லட்சத்துடன் 4-வது இடத்தில் உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் ரூபாய் 1.48 லட்சத்துடன் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
ஹீரோ Xtreme 125R ரூபாய் 99,157 உடன் 6-வது இடத்தில் இருக்கிறது. ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 ரூபாய் 1.73 லட்சத்துடன் 7-வது இடத்தினை பிடித்துள்ளது . டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் ரூபாய் 1.19 லட்சத்துடன் 8-வது இடத்தில் உள்ளது. பஜாஜ் பல்சர் NS 200 ரூபாய் 1.49 லட்சத்துடன் 9-வது இடத்தில் உள்ளது. டிவிஎஸ் ரைடர் 125 ரூபாய் 99,155 உடன் கடைசி இடத்தினை தக்க வைத்துள்ளது.
-இரசிக பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Anna Library: சூப்பர் திட்டத்தினை அறிமுகம் செய்த… அண்ணா நூற்றாண்டு நூலகம்!
பாலியல் வழக்கு : முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு!