இந்திய அளவில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் பட்டியலை ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவிலான திரைப்படங்களுக்கு ஐஎம்டிபி தொடர்ந்து ரேங்கிங் கொடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, டாப் திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் 2022ஆம் ஆண்டில், இந்திய அளவில் டாப் 10-ல் உள்ள நடிகர், நடிகைகள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐஎம்டிபி.
அதன்படி முதல் இடத்தில் இருப்பது. கோலிவுட் ஸ்டார் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் நானே வருவேன், திருச்சிற்றம்பலம், மாறன் மற்றும் பாலிவுட்டில் தி கிரே மேன் திரைப்படம் வெளியானது.
இரண்டாவது இடத்தில் இருப்பது, பாலிவுட் நடிகை ஆலியா பட். இவரது நடிப்பில் கங்குபாய் கத்தியவாடி, ஆர்.ஆர்.ஆர், டார்லிங்ஸ், பிரம்மாஸ்தரா ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
மூன்றாவது இடத்தில் இருப்பது ஐஸ்வர்யா ராய் பச்சன். மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நான்காவது இடத்தில் இருப்பது டோலிவுட் நடிகர் ராம் சரண். ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர். ஆர் படத்தில் நடித்திருந்தார். 2023 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்குச் சிறந்த நடிகர் என்ற பிரிவில் இவரது பெயர் இந்தியப் பரிந்துரை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது இடத்தில் கோலிவுட்டில் அறிமுகமாகி தற்போது டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் சமந்தா. இந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன.
ஆறாவது இடத்தில் இருப்பது பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன். தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்திருந்தார்.
ஏழாவது இடத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இருக்கிறார். கடந்த ஆண்டு (2021) ஃபிலிம் ஃபேர் விருதுக்காகச் சிறந்த நடிகை என்ற பிரிவில் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
டோலிவுட் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் எட்டாவது இடத்தில் இருக்கிறார். ஆர்.ஆர்.ஆர் படத்தில் இந்த ஆண்டு நடித்திருந்தார். சிறந்த நடிகர் என்ற பிரிவில் இவரது பெயர் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்க இந்தியப் பரிந்துரை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். 2021 டிசம்பர் மாதம் இவரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கின்றன. புஷ்பா இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.
கன்னட நடிகரான யாஷ் பத்தாவது இடத்தில் இருக்கிறார். கேஜிஎஃப் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பெரிய இடத்தையே பிடித்துள்ளார்.
மோனிஷா
நாளை எந்தெந்த மாவட்டங்களில் கன மழை பெய்யும்?
மின் இணைப்புடன் ஆதார்: வழக்கு நாளை ஒத்திவைப்பு!