பிக்பாஸ் தமிழ் 8வது சீசன் நாளையுடன் முடிவடைகிறது. பட்டத்தை வெல்ல போவது யார் என்கிற ஆர்வம் இப்போது எழுந்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் 8 சீசன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 13 பேர் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், முத்துக்குமரன், பவித்ரா ஜனனி, ரயான், வி.ஜே. விஷால், சவுந்தர்யா இறுதி போட்டியாளர்களாக தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ரயான் வைல்டு கார் என்ட்ரி ஆவார்.
நடப்பு சீசன் நாளையுடன் முடிவடைகிறது. கடைசி நாள் நிகழ்ச்சி ஜனவரி 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி பிளாட்பார்மிலும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த முறை முதலிடம் பிடிப்பவர்களுக்கு டிராபியுடன் 50 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைக்கும்.
இறுதிப் போட்டியாளர்களில் யார் பட்டத்தை வெல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி, முத்துக்குமரன் மற்றும் ரயான் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இறுதி சுற்றுக்கான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்