பியூட்டி டிப்ஸ்: இம்சை தரும் கால் ஆணி… தீர்வு என்ன?

Published On:

| By Kavi

Toenail Fungus Diagnosis and treatment

கால் ஆணி என்பது பலரையும் பாதிக்கிற ஒரு பிரச்சினை. அநேகம் பேர் வாழ்நாளில் ஒன்றிரண்டு முறையாவது இந்தப் பிரச்சினையை அனுபவித்திருப்பார்கள். Toenail Fungus Diagnosis and treatment

அழுத்தம் அல்லது உராய்வின் காரணமாக பாதத்தின் ஒரு பகுதி மட்டும் அழுத்தமாக, கடினமாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பு இது.

பயப்படக்கூடிய அளவுக்கு இது பெரிய பிரச்சினை இல்லை என்றாலும் கால் ஆணியில் வலி இருந்தால் நிச்சயம் கவனிக்கப்பட வேண்டும். மருத்துவரை அணுகி, அவற்றை அகற்ற வேண்டியது அவசியம்.

இந்தப் பிரச்சினை பாதத்தில் மட்டும்தான் வரும் என்றில்லை. கைகளிலும் வரலாம். அழுத்தமும் உராய்வும் அதிகமுள்ள எந்தப் பகுதியிலும் வரலாம். இந்தப் பிரச்சினையை  ‘கார்ன்ஸ் மற்றும்  கேலசஸ்’  (Corns and Calluses) என்கிறார்கள் சரும மருத்துவர்கள்.

முதலில் குறிப்பிடப்பட்ட கால் ஆணி என்பது கார்ன்ஸ் வகையில் வரும். இது சிறியதாக ஆனால், ஆழமாக இருக்கும். அதிக வலியைத் தரலாம்.

அடுத்து குறிப்பிட்ட கேலசஸ் என்பது அகலமாக ஆனால், ஆழமில்லாததாக இருக்கும். அழுத்தம் அதிகமாக இருப்பதால் பாதப் பகுதியில்தான் இந்தப் பிரச்சினை அதிகம் தாக்கும்.

இதற்கான முக்கிய காரணம் நாம் அணிகிற காலணிகள் ரொம்பவும் டைட்டான காலணிகள், ஹீல்ஸ் வைத்த காலணிகள் அணிவதுதான் காரணம்.

காலணிகள் அணியாமல் வெறுங்கால்களில் நடப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். ஷூ அணிகிறபோது விரல்கள் அசைகிற மாதிரி இருக்க வேண்டும். இறுகப் பிடித்து வைத்த மாதிரி இருக்கக் கூடாது. சாக்ஸ் அணியாமல் ஷூ மட்டும் அணிவோருக்கும் இந்தப் பிரச்னை வர வாய்ப்புகள் அதிகம்.

இப்போதெல்லாம் குஷன் வைத்த இன்சோல் கிடைக்கிறது. ஜெல் போன்ற உணர்வைத் தரும் இவற்றை ஷூக்களின் உள்ளே பொருத்திக்கொள்ளலாம். நீண்ட நேரம் நிற்கும்போது பாதங்களுக்கு நல்ல சப்போர்ட் கொடுப்பவை இவை. அழுத்தம் ஏற்படுவதையும் அதன் விளைவாக கால் ஆணி உருவாவதையும் தடுக்கும்.

முறையான ஷூ அணிவது, ஜிம் வொர்க் அவுட் பண்ணும்போது கைகளில் இப்படி வருவதைத் தடுக்க கிளவுஸ் அணிவது போன்றவற்றைப் பின்பற்றுவதே இவை வராமல் தடுப்பதற்கான வழிகள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டிஜிட்டல் திண்ணை: அட்டாக் உதயநிதி… ஆர்டர் போட்ட மோடி- டெல்லியில் நிர்மலா தாண்டவம் பின்னணி!

பேரிடர் நிதியில் பெரிய இடி : அப்டேட் குமாரு

தோனியின் ஆசை நிறைவேறியது: சி.எஸ்.கே-வின் ‘பிளேயிங் 11’ என்ன?

”ஹிஜாப் தடை நீக்கப்படும்” – சித்தராமையா உறுதி!

Toenail Fungus Diagnosis and treatment

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share