டைட்டானிக் கப்பலில் பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனு கார்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டைட்டானிக் கப்பலின் பிரம்மாண்டத்தை போல அது குறித்த ஏராளமான புத்தகங்களும், ஆவணப்படங்களும், திரைப்படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய 111 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் அதை நினைவு கூறும் விதமாக டைட்டானிக் அட்லஸ் என்ற இன்ஸ்டாகிராம் பேஜில் டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளான இரவு பரிமாறப்பட்ட உணவு வகைகளின் மெனு பகிரப்பட்டது. அந்த மெனு தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முதல் வகுப்பு
முதல் வகுப்பு பயணிகளுக்கு ஃபில்லட்ஸ் ஆஃப் ப்ரில், கார்ண்ட் பீஃப், வெஜிடபில்ஸ், டம்ப்ளிங்ஸ், க்ரில்ட் மட்டன் சாப்ஸ், கஸ்டர்ட் புட்டிங், பாட்டட் ஷ்ரிம்ப்ஸ், நார்வேஜியன் ஆன்சோவீஸ் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு
சிக்கன் கறி, வேகவைத்த மீன், ஸ்ப்ரிங் லேம்ப், ஸ்ப்ரிங் மட்டன், டர்கி ரோஸ்ட், புட்டிங் எனப் பரிமாறப்பட்டுள்ளது. இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு ப்ளம் புட்டிங் டெஸர்ட்டாக பரிமாறப்பட்டுள்ளது.
மூன்றாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு பயணிகளுக்கு ஓட்மீல் பாரிட்ஜ், பால், ஸ்மோக்ட் ஹெர்ரிங்ஸ், ஜேக்கட் பொட்டேடோஸ், முட்டைகள், ஃப்ரெஷ் ப்ரெட், பட்டர், மர்மலேட், ஸ்வீடிஷ் ப்ரெட் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மன்னிப்பு கேட்க முடியாது: தி.மு.க நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்!