இன்றைய சூழ்நிலையில் ஏசியில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்படி ஏசியில் புரிபவர்களுக்குச் சருமம் கூடுதல் வறட்சியாகும். எனவே, ரோஸ் வாட்டர், கிளிசரின், லாவண்டர் ஆயில் மூன்றையும் சம அளவில் எடுத்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அவ்வப்போது முகத்தில் ஸ்பிரே செய்துகொள்ளலாம் அல்லது சுத்தமான பஞ்சில் நனைத்து முகத்தை ஒத்தியெடுத்தால் ஏசியினால் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்கலாம்.
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதெல்லாம் செய்ய நேரம் இருக்காது. அவர்கள், இரவு படுப்பதற்கு முன்பு, பாதாம் ஆயிலையும் கிளிசரினையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து படுத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை, மைல்டான ஃபேஷ் வாஷ் க்ரீம் மூலம் முகத்தைச் சுத்தம் செய்தால், சருமம் வறட்சியின்றி இருக்கும்.
உதடுகள் வெடிப்புகளுடனும் சுருக்கங்களுடனும் கறுத்துக் காணப்படுபவர்கள் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு சேர்க்காத வெண்ணெய் ஒரு டீஸ்பூன் எடுத்து ஒன்றாகக் கலந்து உறங்கச் செல்வதற்கு முன் உதடுகளில் அப்ளை செய்து கொள்ளவும். தொடர்ச்சியாக ஒரு வாரம் இதைச் செய்து வர உதடுகள் இயற்கைச் சிவப்பழகு பெறும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
களைகட்டிய சென்னை… நம்ம ஊரு திருவிழாவில் இத்தனை கலை நிகழ்ச்சிகளா?
பொங்கலுக்கு மெட்ரோ ட்ரெயின்ல போறீங்களா? – இதை நோட் பண்ணுங்க!
பொங்கல் அலப்பறைகள்… அப்டேட் குமாரு
சிந்தாதிரிப்பேட்டை புதிய மீன் அங்காடிக்கு எதிராக வழக்கு!
Champions Trophy : பவுமா கேப்டன்சி.. 136 ஆண்டுகால ஏக்கத்தை போக்குமா தென்னாப்பிரிக்கா?