ஹெல்த் டிப்ஸ்: பல் சொத்தை வராமல் தடுக்க… இதைக் கடைப்பிடியுங்கள்!

டிரெண்டிங்

நாம் சாப்பிடும் உணவானது நமக்கு மட்டும் உணவாக இருக்கும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால், அது வாயில் இருக்கும் கிருமிகளுக்கும் உணவாக மாறும்போதுதான் பல் சொத்தை உருவாகத் தொடங்குகிறது.

உண்ணும் உணவானது எச்சிலுடன் சேர்ந்து ஒரு பசை போல மாறி பல் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால் கிருமிகள் அவற்றை உண்டு பற்களின் மேல் படலமாகப் படர்ந்து அங்கேயே வளரத் தொடங்குகின்றன.

முறையாக பற்களைச் சுத்தம் செய்யத் தவறும்போது இத்தகைய கிருமிகள் உருவாக்கும் அமிலமானது, பல்லின் எனாமல் (Enamel) பகுதியைத் தாக்குவதுடன், எனாமலில் உள்ள கால்சியத்தையும் அரிக்கத் தொடங்கி கரைய வைக்கும். இதுதான் பல் சொத்தையின் முதல்கட்டம்.

இந்த நிலையில். ”எப்படி பல் துலக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது முக்கியம். அப்படி துலக்கினால் பல் சொத்தை வராது” என்கிறார்கள் பல் மருத்துவர்கள்.

மேலும், ” நாம் உபயோகிக்கும் டூத் பிரஷ்ஷானது சாஃப்ட், எக்ஸ்ட்ரா சாஃப்ட் வகையாக இருக்க வேண்டும்.

தினமும் இருவேளைகள் பற்களைச் சுத்தம் செய்யும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சிறு பட்டாணி அளவு பற்பசையைப் பயன்படுத்தினால் போதுமானது.

அதேபோல் டூத் பிரஷ்ஷின் நார்ப்பகுதியானது விரியத் தொடங்கியவுடன் பிரஷ்ஷினை மாற்றிவிட வேண்டும்.

மேலும், பற்களின் இடுக்குப் பகுதிகளை பிரஷ்ஷின் நாரானது சுத்தம் செய்யாது. இதற்கு ஃப்ளாஸ் (Floss) கொண்டு பல் இடுக்குகளைச் சுத்தம் செய்வதும் பயன் தரும்.

அதேபோல் பின்புறப் பற்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளிகளைச் சுத்தம் செய்ய இன்டர் டெண்டல் (Inter Dental) பிரஷ் என்கிற முறையும் உண்டு. பல் மருத்துவரை அணுகியும் சரியான முறையில் பற்களைச் சுத்தம் செய்யும் முறையை அறிந்துகொள்ளலாம்” என்கிறார்கள்

அத்துடன், “நாம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், வைட்டமின் கே மற்றும் சி அதிகம் உள்ள கீரைகள் மற்றும் பழவகைகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை மற்றும் ஒட்டும் தன்மையுடைய (Sticky Foods) உணவுகளைக் குறைத்து சாப்பிட்டால் பற்கள் சொத்தையாவதைத் தவிர்க்கலாம்.

இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான உப்புத் தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம். இதன் மூலம் பல் சொத்தையாவதைத் தடுக்கலாம்” என்றும் விளக்கமளிக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : தினை அரிசி சர்க்கரை பொங்கல்

இது என்னடா காந்திக்கு வந்த சோதனை? – அப்டேட் குமாரு

மத்திய மாநில அரசுகளின் உறவை ஆளுநர் துண்டிக்கிறார் : அமைச்சர் ரகுபதி

ஒரு எழுத்தாளனுக்கு இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்? – நெகிழ வைத்த ராஜேஷ்குமாரின் பேஸ்புக் பதிவு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *