உடலின் மிக முக்கிய உறுப்பு, மூளை. உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் கட்டுப்படுத்துகிற வல்லமை பெற்ற மூளையைத் தலைமைச் செயலகம் என்பார்கள்.
உடலுக்கு நாம் உடற்பயிற்சி செய்வதைப் போல மூளைக்கும் நாம் வேலை கொடுக்க வேண்டும். புதிதாக எதையாவது ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதுதான் என்றில்லை… எந்த வயதானாலும் சரி கற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது. புத்தகம் வாசிக்க வேண்டும். சதுரங்கம், தாயம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடலாம்.
மன அழுத்தம் மூளையைப் பெரிய அளவில் பாதிக்கும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தியானம், யோகாசனப் பயிற்சிகள் அதற்கு உதவும்.
மாமிசம், முட்டை, மீன், கீரை வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் என ஆரோக்கியமான உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி மூளையின் நலத்துக்கும் அத்தியாவசியமானது. வாரத்துக்கு 150 நிமிடங்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்தாக வேண்டும். வாரத்துக்கு 5 நாள்களில் மட்டும் தினசரி 30 நிமிடங்கள் ஏதேனும் ஒரு பயிற்சியை செய்தால்கூட போதுமானது என்று பொதுநல மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். Tips to Keep Your brain active
மேலும், நம் உடலுக்கு மூளைதான் பிரதானம் என்பதால்தான் தலை அடிபடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைவரும் வலியுறுத்துகிறார்கள். வாகனம் ஓட்டுகையில் ஹெல்மெட் அணிவது, சீட் பெல்ட் அணிவது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்கள். Tips to Keep Your brain active