பியூட்டி டிப்ஸ்: ஆரோக்கியமான அழகிய நகங்களுக்கு…

Published On:

| By Selvam

நகங்களைப் பராமரிப்பது, அழகு நிலையம் அல்லது நெயில் சலூனுக்கு செல்வதை விட மிகவும் முக்கியம் என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள்.

ஆரோக்கியமான நகங்களுக்கு…  அடிக்கடி விரல்களைச் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கழுவிய பின்னர் ஈரம் போக நன்றாகத் துடைக்க வேண்டும். நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். வறண்ட நகம் கொண்டவர்கள் பாலிஷுக்குப் பதிலாக மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தலாம்.

நகம் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். இதனால், நகத்தில் உள்ள கிருமிகள் வாய்க்கும், வாயில் உள்ள கிருமிகள் நகத்துக்கும் செல்லும்.

கெமிக்கலைப் பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணிய வேண்டும். பாட்டில் மூடி, டப்பாக்களைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்த வேண்டாம். நீளமாக நகம் வளர்ப்பதைத் தவிர்க்கலாம். இது பல காயங்களுக்கு வழிவகுக்கும். நகவெட்டியைக் கொண்டு நகங்களை வெட்டலாம். பிளேடு, கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றைக் கொண்டு நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

நகங்களின் நிறத்திலும் வளர்ச்சியிலும் திடீரென மாற்றம் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: ராஜ்மா சாண்ட்விச்

இதுக்கெல்லாமா பிரேக்கிங் போடுவீங்க… அப்டேட் குமாரு

ஒரே நாளில் 9 லாட்டரி விற்பனையாளர்கள் கைது… அதிரடியாக களமிறங்கிய கலைவாணன் ஐபிஎஸ் : யார் இவர்?

மஞ்சக்கொல்லை – பாமக – விசிக மோதல்: நடந்தது என்ன? கிரவுண்ட் ரிப்போர்ட்!

மகன் தாலி கட்டியதை பார்த்து, நெப்போலியன் கண்களில் திரண்ட கண்ணீர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share