‘துணிவு’ வெற்றி : சபரிமலையில் இயக்குநர் வினோத்

டிரெண்டிங்

பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 11ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அஜித்தின் ஆக்சன் காட்சிகள் நிரம்பி வழியும் இப்படத்தில் சாமானிய மக்கள் மீது வங்கிகள் நடத்தும் அத்துமீறல்கள் பற்றி இயக்குநர் வினோத் காட்சிப்படுத்தியிருந்தார்.

ஆனால் படத்தில் கூறவந்த கருத்தை விட, படத்தின் விளம்பரத்துக்காக நேர்காணல்களில் அவர் கூறிய கருத்துகள் தான் இணையத்தில் படு வைரலானது.

thunivu director h vinoth in sabarimala

அப்படி வினோத் அளித்த ஒரு பேட்டியில், ”சபரிமலைக்கு நான் 6, 7 முறை சென்றிருக்கிறேன். கடவுள் இருக்கு இல்ல என அந்த டாபிக்குள்ள நான் போகல.

கடவுள் இல்லனு வாழ்றதுக்கு ஒரு தெளிவும், தைரியமும் தேவைப்படுது. பிரச்னைகளிலிருந்து, ஏற்படும் சிக்கல்களிலிருந்து வெளியே வர எனக்கு கடவுள் தேவைப்படுறாரு.

நான் கடவுளைக் கும்பிடுறது வழியா யாருக்கும் எந்த பிரச்னையும் இல்ல. கடவுளை வைத்து வியாபாரம் பண்ணவோ, கடவுளை வைத்து அதிகாரத்தை அடையவோ முயற்சிக்கும்போதுதான் கடவுள் பிரச்னையா மாறுகிறார்.

கணிதத்தில் X என்பதற்கு ஒரு ரோல் இருக்கும் இல்லையா, அந்த மாதிரி எனக்கு கடவுள் நம்பிக்கை” என்று பேசியிருந்தார்.

சினிமா, பத்திரிக்கை, காதல், போன்றவற்றுடன் கடவுள் குறித்து இயக்குநர் வினோத் கூறிய கருத்தினை பலரும் வரவேற்று இருந்தனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று இருக்கிறது.

விஜய்யின் வாரிசுடன் அதே நாளில் வெளிவந்த இத்திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.21.97 கோடி வசூல் ஈட்டியது. வரும் பொங்கல் விடுமுறையில் வசூலில் மேலும் சாதனை படைக்கும் என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் கடவுள் குறித்து பேசியிருந்த இயக்குநர் வினோத் சபரிமலைக்கு தற்போது சென்றுள்ளார். மலைப்பாதையில் இயக்குனர் வினோத் நடந்து செல்லும் வீடியோ காட்சிகளையும் அவரது நண்பரும், இயக்குநருமான இரா.சரவணன் வெளியிட்டுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட பதிவில், “அஜித் சாரின் ‘துணிவு’ படம் மகத்தான வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இயக்குநர் வினோத் சபரிமலை யாத்திரை… சாமி சரணம் ஐயப்பா.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ’துணிவு’ திரைப்படம் வெற்றிபெற வேண்டி அஜித் ரசிகர்கள் சபரிமலைக்கு சென்று இருந்தனர். அந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவியது.

இந்நிலையில் துணிவு தற்போது வெற்றி பெற்றதை அடுத்து இயக்குநர் வினோத் சபரிமலைக்கு நடந்து செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிறிஸ்டோபர் ஜெமா

திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் தந்த பொங்கல் ஷாக்!

நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம்பெண்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *