இன்னும் ஒரு சில வாரங்களில் 2023 முடிந்து 2024ஆம் ஆண்டு துவங்கவிருக்கிறது. புதிய வருட தொடக்கத்திற்கான உற்சாகம் அனைவரிடமும் தென்பட தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு வருட முடிவிலும் நாம் அனைவரும் வங்கி, சேமிப்பு மற்றும் ஆவணங்கள் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் அப்டேட்களை சரிபார்ப்பது முக்கியமான ஒன்றாகும்.
அதன்படி இந்தமாத (டிசம்பர்) இறுதிக்குள் செய்ய வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள் இருக்கின்றன. அதன் விவரங்களை இங்கு பார்க்கலாம்.
1.ஏதேனும் வங்கியில் லாக்கர் வைத்திருக்கிறோம் என்றால் அதற்கான ஒப்பந்தத்தை டிசம்பர் மாத இறுதிக்குள் புதுப்பிக்க வேண்டும் அவ்வாறு புதுப்பிக்கவில்லை என்றால் அந்த லாக்கரை உபயோகிக்க முடியாமல் போகும்.
2. ஸ்டாக் மார்கெட்டில் (Stock Market) முதலீடு செய்திருந்தால் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் demat அக்கவுண்ட் உடன் நாமினியை இணைக்க வேண்டும். இதை செய்ய தவறினால் வரும் ஜனவரி மாதம் முதல் ஸ்டாக்கை விற்கவோ, வாங்கவோ முடியாது.
Nominee இணைக்கும் வழிமுறை:
Step 1: console.zerodha.com/dashboard ஐ லாக்இன் செய்ய வேண்டும்
Step 2: அதில் அக்கவுண்டை க்ளிக் செய்து
Step 3: நாமினியை செலக்ட் செய்ய வேண்டும்
Step 4: அதில் Add nominee தேர்ந்தெடுத்து
Step 5: அதில் நாமினி பற்றிய விவரம் மற்றும் அடையாள சான்றுகளை சமர்பிக்க வேண்டும்
Step 6: Continue-வை க்ளிக் செய்து
Step 7: Proceed to e-sign-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்
Step 8: Sign now -ஐ க்ளிக் செய்து
Step 9: விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அக்சப்ட் செய்து, அக்கவுண்ட் வைத்திருப்பவரின் ஆதார் எண்ணை சமர்பித்து Send OTP ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
Step 10: வந்த OTP ஐ பதிவிட்டு Verify OTP ஐ க்ளிக் செய்ய வேண்டும்.
பதிவிட்ட OTP சரியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த 72 மணி நேரத்தில் ப்ராசஸ் முடிந்து நாமினி அக்கவுண்ட் உடன் இணைக்கப்படுவார். இதன் உறுதிபடுத்தல் இமெயில் மெயில் மூலமாக வரும்.
3. National Payment Corporation of India (NPCI) வெளியிட்டுள்ள தகவலின்படி கடந்த ஒரு வருடத்தில் UPI செயலிகளை பயன்படுத்தாதவர்களின் UPI ஐடி Deactivate செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
UPI ஐடி Deactivate செய்யப்படுவதை தடுக்க ஒரு முறையாவது UPI பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் அல்லது UPI ஐடியை மாற்றுவதன் மூலமான அக்கவுண்ட் ஆக்டிவாக இருப்பதை போன்று காட்டலாம்.
இவை அனைத்தையும் டிசம்பர் 2023 ஆம் ஆண்டு முடிவதற்குள் செய்து முடித்து வரும் புத்தாண்டை இனிமையான புத்தாண்டாக வரவேற்போம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பவித்ரா பலராமன்
கருப்பர் நகரம்: இயக்குநர் பொறுப்பில் இருந்து கோபி நயினார் வெளியேற்றம்!
விபத்து : தந்தை கண்முன்னே சிறுமி உயிரிழந்த சோகம்!